Sunday, 9 September 2018

அபூர்வ கணபதி வசிய மந்திரம் - அகத்தியர்

அபூர்வ கணபதி வசிய மந்திரம் - அகத்தியர்
*************

நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய்.
-அகத்தியர்
பரிபூரணம் 1200

பொருள்:
****

வசியம் முதல் மாரணம் வரையிலான
எட்டுவகை கர்மங்களையும்
சித்திசெய்வதற்க்கு ஒரு வழி சொல்கிறேன்
கேள்,
அது என்னவென்றால் அது கணபதியின்
தியானமாகும். அதை செய்யும் முறை
யாதனில் முதலில் ஒரு செப்புத்தகட்டில் ஒரு
வட்டம் போட்டு அதனுள் ஓம் என்று எழுதி
அந்த ஓம் என்பதற்க்குள் ஸ்ரீ என்று
எழுதவும். இந்த சக்கரத்தை கணபதியின்
முன்னே வைத்து பூசை பொருட்களும்
வைத்து முறையாக பூசை செய்து பின்பு
மனதை ஓர்நிலைப்படுத்தி புருவ
நடுமையத்தில் மனதை நாட்டி " ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீகுரு கணபதி சுவாகா"
என்ற மந்திரத்தை பதினாறு உரு செபித்தால்
கணபதி ஒளி வடிவில் உனக்கு காட்சி தந்து
உனக்கு வசியமாவார். அப்படி கணபதியை
வசியம் செய்தவர்கள் அஷ்டகர்மயோகம்
செய்தால் அது அவருக்கு சித்தியாகும்.

மேலும் அறுபத்து நான்கு சித்துக்களும்
செய்யும் வல்லமை உண்டாகும் என்கிறார்
அகத்தியர்.

அகத்தியர் அருளிய கணபதி மந்திரம் ...
***************

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.

ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன்
குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி
கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர
கணபதி, மூல கணபதி என எட்டு வகை
கணபதி இருப்பதாக கூறுகிறார்.

இந்த எட்டு
வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம்
இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்”
என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு
பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை
பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.

கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம்
வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக்
கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ”
என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர்
அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல
மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள்
செபிக்க வேண்டும் என்கிறார்.

இப்படி செபிக்கப்
பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன்
ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும்
தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம்.

அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம்.
இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில்
இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார்
அகத்தியர்.

- அகத்திய வாத சௌமியம் —

எங்காவது வெளியில் கிளம்பும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் அணிந்து செல்லவும்.குறிப்பாக இன்டர் வியூ,பெரிய மனிதர்களைக் காண செல்லும் பொழுது இதை பின்பற்றவும்.

ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே|
உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாக|
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

No comments:

Post a Comment