Monday, 10 September 2018

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-9)

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-9)*
*********************************************
**********************
*(நன்றி அண்ணாமலை சுகுமாரன் ஐயா...)*
அதிகாரம் 4 = நாடி தாரணை
**********************************
31 ) எழுபத்தீராயிர நாடி அவற்றுள்
முழுப்பத்து நாடி முதல்
எழுபத்தீராயிர நாடி = நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது
அவற்றுள் = அந்த 72000 நாடிகளுக்குள்
முழுப்பத்து நாடி = முழுமையான முக்கியமான
பத்து நாடிகள் உள்ளன .
முதல் = அந்த 10 நாடிகளில் முதன்மையான முக்கிய நாடி ஒன்று இருக்கிறது .
நமது உடலில் உள்ள 72000 நாடிகளில் தச நாடிகள் எனும் பத்து நாடிகள் முக்கியமானவை அவை
1-இடா –
2- பிங்களா –
3- சுழுமுனை –
4 – சிங்குவை –
5 – புருடன்
6 – காந்தாரி –
7 – அத்தி –
8 – அலம்புடை –
9 – சங்கினி –
10 – குரு எனப்படும் .இவைகளில்
1-இடா – வலதுகால் பெருவிரல் தொடக்கி கத்தரிக்கோல் போல் மாறிசென்று இடது மூக்கைச் சென்று அடையும்
2- பிங்களா – இடது கால் பெரு விரலில் ஆரம்பித்து மாறிச் சென்று வலது புற மூக்கை பற்றி நிற்கும்
3- சுழுமுனை – மூலாதாரத்தில் தொடங்கி எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக நடுநிலையாய் இருந்து ஆறு ஆதாரங்களின் வழியே சிரசில் போய் முட்டி நிற்கும்
இதுவே இங்கு ஔவைசொல்லும் முதன்மையான முக்கியஒரு நாடி ஆகும் .
இதில் இப்போது நாம் முக்கியமாக உணரவேண்டிய விடயம் ஒன்று உண்டு .அது நாடிகள்என்பது நரம்புகள் அல்ல என்பதுவே .
நாடிகள் சூக்ஷுமமானவை , கண்ணுக்குத்தெரியாதது .
இது உடம்பினுள் உயிராற்றல் எனும் பிராணனை உடல் முழுவதும் கடத்த பயன்படுகிறது .
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம்தான்
மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் முக்கியமானவை .தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன
நரம்புகளின் இயக்கம் பயன் இவர்களைப்பற்றி மருத்துவ நூல்கள் விவரிக்கின்றன .
ஞான நூல்கள் கண்ணுக்குத்தெரியாத சூக்ஷுமமான நாடிகளை ஆயகின்றன .
இடகலை , பிங்கலை என்று சிலர் கூறுவது உண்டு .
ஆனால் இடகலை என்பது இடது மூக்கு துவாரம் ,
பிங்கலை என்பது வலது மூக்கு துவாரம் .
கலை என்பது காற்றைக் குறிப்பிடும் வார்த்தை ஆகும் .
அது நாடிகளை குறிக்காது .
நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராணனை அந்தந்த மூக்குத்துளைகளில் உள்ள நாடிகள் எடுத்து சென்று
சேமிக்கும் .
இன்னும் பல நாடிகள் பற்றிய செய்திகளை அடுத்ததாக குறளில் காணலாம் .
32 ) நரம்பெனும் நாடி இவைகளுக்கெல்லம்
உரம் பெறும் நாடி ஒன்று உண்டு
நரம்பெனும் நாடி = நரம்பென்றுக்
கருதப்படும் நாடிகளில் ,
இவைகளுக்கெல்லாம் = இந்த
நாடிகளுக்கெல்லாம் ,
உரம் பெறும் = வலிமை
அளிக்கக்கூடிய
நாடி ஒன்று உண்டு = முக்கிய நாடி
ஒன்று உண்டு .
நாடிகளை நரம்பு என எண்ணுபவர்கள்
ஔவையின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்
போலும் .எனவேதான் நரம்பெனும் நாடி
எனக்குறிக்கிறார் . நாடிகள் சூக்ஷுமமானவை
. எனவே இது ஞான நூல்களில் பேசப்படுகிறது
.மேலும் அவர் இவைகளுக்கு எல்லாம் என
பன்மையில் குறிப்பிடுவதால் நாடி வேறு நரம்பு
வேறு என்பதும் உறுதியாகிறது .
இன்னமும் நாடிகள் பற்றிய பல விஷயங்களை
இந்த அதிகாரத்தின் பத்து குறள்களில்
விவரிக்கிறார் .நாடிதாரணை ,வாயு தாரணை
,அங்கி தாரணை ,அமுத தாரணை என்று பல
அற்புத தகவல்களை இரண்டு அடிகளில் அருமைக்காக நம் பால் கொண்ட அன்பினால் நமது ஔவை பாட்டி அடுத்தெடுத்து அளித்திருக்கிறார் .இதைத் தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு எனது நன்றி .
தமிழன் பெருமை ஆன்மீகத்திலும் அதிகம்
உள்ளது .
முக்கிய நாடி என்று ஔவை குறிப்பிடும் அந்த
முக்கியநாடி சுழுமுனை எனும் ஆற்றல் மிக்க
நாடிதான் .
சுழுமுனைநாடிமூலம் பிராணன் எனும்
உயிர்ப்பு சக்தி உடல் முழுவதும் பரவி உள்ளது
.பிராண சக்தி தன போக்கில் அந்த நாடிவழியே
பாதம் முதல் தலை உச்சி வரை சென்று
கொண்டுதான் இருக்கிறது .ஆனால் அது
மெதுவாக செல்கிறது .யோகத்தின் மூலம்
அதை வேகப்படுத்துகிறோம் .வேகமாக மேல
ஏற்றுவதால் இன்னமும் அதிக பிராணன்
உடலில் சேருகிறது .இது அசைந்து அசைந்து
மேலே செல்லும் போது இன்னமும் அதிக
பிராணன் உடலில் சேருகிறது .உடல் இளமை
ஆகிறது .முகம் பிரகாசிக்கிறது .
நரை திரை இல்லாமல் ஆகிறது .
'உருத்தரித்த நாடியில்ஒடுங்குகின்றவாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற
வல்லீரேல்விருத்தரும் பாலராவர் மேனியும்
சிவந்திடும்
சிவவாக்கியா;
இங்கு உருத்தரித்த நாடிஎன்பது சுழுமுனை ,
ஒடுங்குகின்ற வாயு பிராணன் ஆகும்
மூலாதாரத்தில் இருக்கும் பிராணனை
கருத்தினால் இருத்தியே உச்சிக்கு ஏற்றினால்
முதியவரும் இளையவராவார் .
என்கிறார் சிவவாக்கியர் .
மேலும் பல நாடிபற்றிய தகவல்களை அடுத்த
பகுதியில் காணலாம் .
33 ) உந்தி முதலாய உறு முடி கீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து .
உந்தி முதலாய = உந்தி என்பது நாடியின் மத்திய தளம்
நாபிக்கமலம் என்று கூறும் இடம்
அதுவே மணிப்பூரக ஸ்தானம் அது முதல் ,
முடி = உச்சி வரை
கீழ் மேலாய் = நாபிக்கு கீழாகவும் மேலாகவும்
உறு = பொருந்தி
பரிந்து = அன்புடன்
பந்தித்து நிற்கும் = உறுதியாக நிற்கும் .
இங்கு அவ்வை கூறும் நாடி முந்தய குறளில் கூறிய முக்கிய நாடியைப்பற்றியது
அந்த முக்கிய நாடியை குருநாடி .,ஓங்கார நாடி , குண்டலினி நாடி என பலவாறு அழைப்பார்கள் .அந்த ஒப்பற்ற நாடியே நாபிக்கு கீழாகவும் மேலாகவும் ஓடி உச்சிவரை செல்கிறது .
இந்த உந்தியை தொப்பூழ எனக்கூறுவாரும் உண்டு .
ஆயினும் அது உந்தி , நாபிக்கமலம் ,உந்திக்கமலம் , நாபி
என குறிப்பிடும் அனைத்தும் மணிபூரகம் எனும் மத்திய பாகத்தையே .என குருமார்கள் கூறுகிறார்கள் .இந்த‌முக்கிய ‌நாடியான‌து நேர‌டியாக‌ ஆறு ஆதார‌ங்க‌ளுட‌ன் எந்த‌வித‌த‌டையுமின்றி இணைந்துள்ள‌ ஒரேயொரு
நாடியாகும்.
இத‌னூடாக நிரந்தரமாக பிராண‌ ச‌க்தி செலுத்த‌ப்பட்டால்
சூஷ்ம‌ ச‌ரீர‌த்தின்முழுமையான‌ க‌ட்டுப்பாடும்,
அழிவ‌ற்ற‌ ச‌க்தியும், காயகற்பநிலையும் கிடைக்கிறது.
நாடிகளைப்பற்றிக் கூறும் வைத்தியத்தில் பயன்பயன்படும்
நாடிகளைப்பற்றி சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள் .
ஆனால் ஞான நூல்களில் கூறப்படும் 72,000 நாடிகளில் முக்கிய நாடுகளான தசநாடியின் பெயர்களை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் .அவைகளில் வைத்திய நாடிகளான
வாத , பித்த ,கப நாடிகள் பற்றி குறிப்பு இல்லையே என வினா எழுப்பினார்கள் .
ஞான நூல்களில் வாத பித்த கப நாடிகளிலின் பெயர்கள் இடம்பெறவில்லை .அதே சமயம் அந்த நாடிகள் இல்லாமலும் இல்லை .
சித்த வைத்தியம் எனும் தத்துவமே நாடிகளைவைத்துதான்
எழுப்பப்படுகிறது .
சித்த மருத்துவத்தில் நோயினைக் கண்டறிவதற்கு அடிப்படையான பரிசோதனை முறைகள் எட்டு உள்ளன.
அவை, நாடி, ஸ்பரிசம், நாக்கு, நிறம்,மொழி (நோயாளியின் பேச்சு) விழி, மலம்,சிறுநீர்
இவற்றுள் முதன்மையானது நாடி பார்ப்பது ஆகும்
இருதயம் இரத்தத்தை இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் உந்தித் தள்ளுகிறது. இப்படி ஓடும் இரத்தத்தினால் இரத்தக் குழாய்களில் உணரப்படும் துடிப்பே அலோபதியில் நாடிஎனக் கருதப்படுகிறது
பொதுவாக எந்த மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவரிடம் சென்றாலும் கையைப் பிடித்து நாடி பார்ப்பார்.
சாதாரணமாக அலோபதி மருத்துவர்கள் பார்க்கும் நாடி என்பது வெறும் எண்ணிக்கைதான். அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கவேண்டும்.
இதற்கு pulse rate என்று பெயர்.
இந்த எண்ணிக்கை கூடுவதை, குறைவதைக் கொண்டு உடலின் செயல்பாட்டை பொதுவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த நாடி கணிப்பு வேறு, சித்த மருத்துவமுறை நாடி கணிப்பு வேறு.ஞான நூல்களில் கூறப்படும் நாடிவேறு
இன்னமும் நாடி ஜோதிடம் என்ற ஒரு முறையும் உண்டு
ஆனால் ஞான நூல்களில் கூறப்படும் நாடி என்பது முற்றிலும் வேறானது .மிக முக்கியம் வாய்ந்தது .
ஒட்டுமொத்த தச நாடிகளின் சங்கமம்தான் நமது உடல் .
நமது உடலின் ஆரோக்கியம் வாதம் , பித்தம் , கபம் என்னும்
மூன்று தோஷங்களால் அமைகிறது .
இதில் வாதம் என்பது பஞ்ச பூதத்தில் காற்றின் அம்சம்
இதில் பித்தம் என்பது பஞ்ச பூதத்தில் தீயின் அம்சம்
இதில் கபம் என்பது பஞ்ச பூதத்தில் நீரின் அம்சம்
தசநாடிகளில் முதல் மூன்று நாடிகள் இடா , பிங்களா , நடுநாடி வாதத்தின் கூறு ஆகும் .
அடுத்த நான்கு நாடிகள் சுழுமுனை,காந்தாரி ,அத்தி ,சிங்குவை , ஆகியவை வெப்பம் எனும் பித்த நாடியாகும் .
இறுதியாக அலம்புடை ,புருடன் ,சங்கினி ஆகியவை மூன்றும் கப நாடியின் அம்சமாகும் .
நாடிகளைப்பற்றிய 10 குறள்களும் ,வாயு தாரணை எனும் அடுத்த 10 குறள்களையும் படித்த பின் உங்களுக்கு நல்ல தெளிவான நிலை ஏற்படும் .
சித்தர்களின் வைத்திய நாடி முறை மிக அற்புதமானது , அவர்களைப்பற்றிய பல தகவல்களைத் தனியே காணலாம் .
34 )காலொடு கையின் நடு இடத்து தாமரை
நூல் போலு நாடி நுழைந்து
காலொடு = கால்களோடு
கையின் = கைகளிலும்
நடு = மத்திய பாகத்திலும்
இடத்து = ( உடல்முழுவதும்)பக்கங்களிலும்
நாடி = ஓம்கார நாடியானது
தாமரை
நூல் போலு = தாமரை தண்டில் இருக்கும் நூல் போன்று
நுழைந்து = உள்ளே நுழைந்து இருக்கிறது .
கால்களில் ஆரபித்து கைமுதலாக உடலின் எல்லா பகுதியிலும் ,
ஓம்கார நாடி தாமரை தண்டின் நூல் போல மெல்லியதாக வியாபித்து உள்ளது .
இந்த குறளில் முக்கிய நாடியின் அளவை தாமரைத் தண்டின் நூல் போல
அத்தனை மெல்லியதாக இருப்பதாகக் கூறுகிறார் .
இந்த ஓம்காரநாடி உடலில் வியாபித்து அறிவின் மயமாகவே இடம்பெற்றிருப்பதால் , ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கடவுளை கண்டதும் கும்பிடுவது போல கும்பிடுகிறோம் என்று கூறுகிறார் சுந்தரமாணிக்க யோகியேஸ்வரர் .
உடலில் முழுவதும் வியாபித்துள்ள 72,000 நாடிகளில் முக்கிய 10 நாடிகளின் பெயர்களை முன்பு பார்த்தோம் , அவைகள் எவ்வாறு உடலில் வியாபித்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம் .
இடா = வலது கால் பெருவிரல் முதல் உடலில் பெருக்கல் குறிபோல மாறி மாறி சென்று இடது பக்கநாசியை அடைவது
பிங்களா = இடது கால் பெருவிரல் முதல் உடலில் பெருக்கல் குறிபோல மாறி மாறி சென்று வலது பக்க நாசியை அடைவது
நடு நாடி = மூலாதாரத்தில் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் ஆதாரமாக
விளங்குவது .
சுழி முனை = இதுவே உச்சித தாமரை வரை சென்று விளங்குவது
காந்தாரி = கண்களில் சென்று செயல்படுவது
அத்தி =உடலெங்கும் வியாபித்து செயல்படுவது
சிங்குவை = உண்ணாக்கில் நின்று உணவு , நீர் இவைகளை விழுங்க செய்வது
தற்காலத்தில் முக்கியமாக மருந்து மாத்திரைகளையும் விழுங்க செயகிறது
அலம்புடை = இரு செவி வரை சென்று இயங்க செயகிறது .
புருடன் = புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது.
புருவம் புருடன் (புருசன் ) புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது., புரு > புருடன் பெண்ணுக்குப் பாதுகாப்புத் தருபவன்
இறைவனை தவிர அனைத்து ஆன்மாக்களும் பெண் தன்மை கொண்டவை
புருடனை நாடுவது ஆன்மாக்களின் இயல்பு .
இந்த புருடன் எனும் நாடி பரத்தை பற்றி நிற்பது .
இன்னமும் விரிவாக தனினயே விவாதிக்கலாம் .
சங்கினி = இது மார்பை பற்றி நிற்பது .இதய கமலத்துடன் தொடர்பு கொண்டு .
இவாறு நாடிகள் உடலெங்கும் வியாபித்து தாமரை தண்டின் நூல்போல
முக்கிய பங்காற்ற உதவுகிறது .
தச நாடிகளும் தசவாயுக்களும் மிக முக்கியமானவை , இவைகளை புரிந்து கொள்வது மிக முக்கியமானது .
இனி அடுத்த குறளை அடுத்தட்டுக்கனலாம் .


- *தொடரும்.....

3 comments:

  1. திரு பணி சிறப்பு ...

    ReplyDelete
  2. Sir, want to know more about the Nadis. Can you help

    ReplyDelete
  3. Very valuable and useful information. THANKS

    ReplyDelete