Thursday, 6 September 2018

நிலம் புரண்டி மை ..பாதாளத்திலுள்ள புதையல் தெரிய உதவும் .

.நிலம் புரண்டி..
நிலம் புரண்டி என்னும் மூலிகையானது சாதாரணமாக பூமியிலே இதர மூலிகையைப் போலவே விளைந்திருக்கும்.
அது மனிதர்களின் காற்றுவாடைப்பட்ட மாத்திரத்தில் பூமியைச் சுரண்டிக் கொணாடு உள்ளே போய்விடும்.
அதனாற்றான் அதற்கு நிலம்புரண்டி யென்றபெயர் உண்டாயிற்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் சில தேத்தான் கொட்டைகளை கையில் வைத்துக்கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தால் எந்தவிடத்தில் அம்மூலிகையிருக்கிறதொ அங்கு நமது கையிலிருகும் தேத்தான் கொட்டையினுடைய மகுத்துவத்தால் அது உள்ளே போகாது.
அப்படிப்பட்ட நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு, செவ்வாய்,வியாழன் இந்த மூன்று கிழமைகளில் எந்தகாகிழமைகளிலாவது அதிகாலை சூரிய உதயத்திற்க்கு முன் சென்று அவ்விடத்தை சுத்தஞ்செய்து அச்செடிக்குச் சாபம் நிவர்த்தி செய்து, உயிர் கொடுத்து, காப்புகட்டி பொங்கலிட்டு தூபதீபங் கொடுத்து பிடுங்கி வந்து, குழித்தலமிறக்கி அதோடு கோரோஜனை,புனுகு,ஜவ்வாது, பச்சைகற்பூரம் இம்மூன்றையும் சமனெடையாகச் சேர்த்துக் குழைத்து மையாக்கி சிமிளில் அடைத்துக்கொள்ள வேண்டும். பின் மைக்கு ஆஞ்சனேய மந்திரத்தை 1008 தரமும்,அஞ்சனாதேவி மந்திரத்தை 1008 ஜெபித்து மைக்கு உயிருண்டாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
மையை தேவையான போது ஒரு பயிரளவெடுத்து வெற்றிலையில் தடவிப் பார்க்க பாதாளத்திலுள்ள புதையல்க ளெல்லாம் கண்களுக்கு நன்றாகத் தெரியும்.

No comments:

Post a Comment