Monday, 24 September 2018

சிவ சிவ சிவாய நம எனும் மந்திரம்

சிவ சிவ சிவாய நம,
உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது சிவாயநம எனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது . இனி ஐந்தெழுத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள் .!!!
(சி) --- சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை , தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது . யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம் தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும்.
(வா)--- வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி .உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.
(ய)-- ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது , உடலில் உயிர் , சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம் , ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது , பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .
(ந)--- பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது , மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,
(ம)--- நீர் --- ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் , ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி , ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது , பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது .
இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல் படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர், மூவுலகும் உங்களை பின் பற்றும் உன்னத நிலை அடையலாம் !!
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை பிரம்ம மான ஈசனின் மருவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில் நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை எல்லாம் அவன் , எல்லாம் அவன் செயல்,,
ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான் என்பதை பார்ப்போம் .
1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை , வெட்கம் ,
போன்றவையாக செயல் படுகிறான்.
2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் , தாண்டுதல் குதித்தல்
போன்றவையாக செயல் படுகிறான் .
3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று, நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்
சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .
4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து ,நாதம்)
போன்றவையாக செயல் படுகிறான் .
5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று , எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,
போன்றவையாக செயல்படுகிறான் .
மேலும் உடல் உறுப்புகளில்
ஆகாயம்----- இருதயம்.
வாயு --------- நுரையீரல்.
அக்னி -------- பித்தப்பை .
அப்பு(நீர்)----- ஈரல் .
பிருத்திவி(மண்)--- மண்ணீரல்.. போன்ற கருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .
1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .
2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.
3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .
4. பிரணவ தேகம், பார்வைக்கு தோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது , சித்தர் தேகம் மாகும் .
5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது , அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும் நம் உடலாகவும்
நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? எல்லாம் சிவமயம் !!
குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!
சிவனைக்கூட பித்தன் என்றுபேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க்கு என்றும்
ஞானப் பார்வை ஏதடா? 
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி

No comments:

Post a Comment