Thursday 27 September 2018

பஞ்ச பட்சியில் பந்தய கணிப்பு

பஞ்ச பட்சியில் பந்தய கணிப்பு
--------------------------------------------
விளையாட்டுப்போட்டிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் மூலம் எளிதில் கணிக்க முடியும். ஆட்டத்தில் பங்கு பெறும் இரு அணிகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை எடுத்து அந்த முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொள்ளவும்.அல்லது அந்த முதல் எழுத்தில் கலந்திருக்கும் உயிர் எழுத்தை எடுத்துக்கொள்ளவும். அந்த உயிர் எழுத்தைக்கொண்டு அந்த அணியின் பட்சியை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
அ,ஆ-வல்லூறு
இ,ஈ-ஆந்தை
உ,ஊ-காக்கை
எ,ஏ-கோழி
ஒ,ஓ- மயில்
ஆட்டம் நடக்கும் நேரத்தில் எந்த அணியின் பெயர் பட்சி அரசு,ஊண் தொழில் செய்கிறதோ அந்த அணி வெற்றி பெறும். எந்த அணியின் பெயர் பட்சி துயில், சாவு தொழில் செய்கிறதோ அந்த அணி தோற்கும்.
நடைத்தொழில்- 50% வெற்றி வாய்ப்பு.
பெயர் பட்சி படுபட்சியானால் தோல்வி
பெயர் பட்சி அதிகார பட்சியானால் வெற்றி வாய்ப்பு அதிகம்.
உதாரணம்
----------------
இந்தியா (இ)- ஆந்தை - அரசு
பாகிஸ்தான் (ஆ)- வல்லூறு - துயில்
இதை வைத்து பார்த்து விட்டு
பிறகு இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு என கூறிவிடலாம்.

No comments:

Post a Comment