ஔவையார்
**************
**************
ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது
அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.
அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.
நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம்.
இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.
பாடல்....
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்"
தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் *கோடிபெறும்*
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெரும்"
உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். “என்றூட்டாதார்” என்பதும் பாடம்.
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதலே கோடி பெறும்"
கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்"
எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் *(உண்மையே பேசும் தன்மை)* *கோடி_பெறும்*
*நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று,
என்றுறைத்தாராம் ஔவை!
No comments:
Post a Comment