Thursday, 6 September 2018

செய்வினை உங்களுக்கு இருக்கா!இல்லையா!!

செய்வினை உங்களுக்கு இருக்கா!இல்லையா!!
செய்வினை இப்பவும் எல்லாராலும் நம்பப்படுகிறது. எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டன் விதி அறிவியலின்படி உண்மையாகிறது. அப்படி பார்த்தால் உலகில் நன்மை என்று இருக்கும் போது தீமை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். நல்ல சக்தி இருக்கிறது என நம்பும்போது தீய சக்தி ஒன்று இருக்கிறது என நம்பியாக வேண்டும்.நல்ல சக்திக்கு நாம் கடவுள் என்று உருவகப்படுத்துகிறோம், கெட்ட சக்திக்கு சாத்தான் என்று உருவப்படுத்துகிறோம். கடவுள், சாத்தான் என்பவை கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் கண்களுக்கு தெரியாத இந்த இரண்டு நல்ல மற்றுஜ் தீய சக்திகளும் இருக்கிறது என்பது கற்பனையாகாது. ஏனென்றால் ஏறக்குறைய எல்லாராலும் இந்த சக்திகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம். அதற்காகவே இந்த பதிவு செய்வினை :
செய்வினை என்பது தீய சக்திகளை குவியலால் வரச் செய்து அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவச் செய்வதுதான். அந்த தீய சக்திகள் அடுத்தடுத்து கெடுதலை அந்த நபரின் மீதி தாக்குதல் நடத்துகின்றன.
செய்வினை வைத்தால் அடுத்த நொடியிலிருந்து வினோதங்கள் உணர்வீர்கள். காரணங்கள் புரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அப்படி நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் என பார்க்கலாம்.
வைப்பார்கள்?
ஒரு நபரின் முடி, துணி அல்லது உடலோடு ஒட்டியிருக்கும் பொருளைக் கொண்டு செய்வினை வைப்பார்கள். அந்த நபரின் புகைப்படத்தைக் கூட வைத்து செய்வினை செய்ய முடியுமாம்.
அறிகுறி -1 :
உங்கள் அருகில் யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது. யாரோ உங்களை தொடுவது போல் உணர்வது . ஆனால் பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.
அறிகுறி- 2
நீங்கள் வைத்த ஒரு பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். இங்கே பார்த்தோம். அப்போ இல்லை. இப்போ எப்படி வந்தது என குழம்புவீர்கள். இந்த நிகழ்வு அடிக்கடி நடக்கும்.
அறிகுறி -3
நன்றாக போய்க் கொண்டிருந்த உங்களது வேலையில் அல்லது சுயதொழிலில் திடீரன தொடர் தோல்விகள் ஏற்படும். காரணங்கள் தெரியாமலே அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படும். பணத்தை இழந்து கொண்டேயிருப்பீர்கள்.
அறிகுறி-4
உடலில் நோய்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எந்த நோய் என மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் காரணமின்றி உடலில் உபாதைகள் வந்த வண்ணம் இருக்கும். தொடர்ந்து வாந்தி அல்லது காய்ச்சல், அல்லது மூட்டு, தோள்பட்டைகளில் தாள முடியாத வலி என சொல்லிக் கொன்டே போகலாம்.
அறிகுறி- 5:
கெட்ட கனவுகள் தினமும் வரும்,. நடு ராத்திரியில் பயந்து எழுந்து கொள்வீர்கள். பெரும்பாலும் ஏதோ தீயவை நடப்பது போலவே கனவுகள் தொடரும்.
அறிகுறி- 6 :
உணவில் சிறு சிறு முடிகள் காணப்படுவது போல் ஒரு உணர்வு இருக்கும். அலறி போய் வேறு சாப்பாடு எடுத்து வந்தாலும், அந்த உணவிலும் சிறிய முடி ஆங்காங்கே காணப்படுவது போலிருக்கும். ஆனால் அது மற்றவர் கண்களுக்கு தெரியாது.
அறிகுறி- 7:
மனப் பிரம்மை பிடிக்கும். சித்தம் கலங்கி போவார்கள். வெளியே போக விரும்ப மாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே, தீய சக்திகள் அதிகம் நடமாடும் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.
அறிகுறி- 8:
சுற்றத்தை இழந்து நிற்பார்கள். மனைவியையோ, கணவனையோ இழப்பார்கள். கூட இருந்த நண்பர்களும் விலகுவார்கள். உறவினர்கள் எட்டியும் பார்க்கமாட்டார்கள். யாருமில்லாமல் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு செய்வினை வைத்திருந்திருப்பதால் இவ்வாறு நடக்கலாம்.
செய்வினைதான் என எப்படி உறுதிப்படுத்துவது?
துளசி :
ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது.
எலுமிச்சை :
எலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம்
பரிகாரம் :
மாதிரியான இக்கட்டான சமயத்தில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றியபிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும்.
ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா என பாருங்கள். ஒரு வாரம் கழித்து நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக எடுத்து தீபம் ஏற்ற வேண்டும்.பூஜையறையில் ஏற்றினால் நல்லது. 3 மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.
யாருக்கெல்லாம் செய்வினை செய்ய முடியாது.
No automatic alt text available.

No comments:

Post a Comment