Wednesday, 19 September 2018

சிவபெருமானைத் தவிர மற்றத் தெய்வங்களுக்கு அழிவுண்டா ?

சிவபெருமானைத் தவிர மற்றத் தெய்வங்களுக்கு அழிவுண்டு என்பதை சுகப்பிர்ம சித்தர் பாட்டில் கூறி உள்ளார்.
காகபுசண்டர் சித்தர் கோடியுகங்கள் வாழ்ந்து கோடிக்கணக்கான பிரம்மாக்களின் அழிவைப் பார்த்துள்ளார். எண்ணில் அடங்காத திருமாலின் அழிவைப் பார்த்து உள்ளார். கோடிக்கணக்கான உருத்திரரின் (சங்கரர்) அழிவைப் பார்த்து உள்ளார். திருமால் பிரம்மா உருத்திரர் என்பது பதவி நிலைகள். பக்குவம் அடைந்த உயிர்கள் கூட இந்தப் பதவியில் அமருவார்கள்.
இதுவே உங்களுக்கு சிறந்த ஆதாரம் சிவபெருமான் மும்மூர்திகளான திருமால் பிரம்மா உருத்திரர்களை விட மேலானவர் என்று.
ஆதலால் அறியாமையால் அல்லப்படும் உயிர்களே நிலையான கடவுளான சிவபெருமானின் கால்களைப் பிடித்து துன்பத்தில் இருந்து விடுதலை பெறுங்கள்.
ஓங்குக சிவபெருமானின் புகழ்.
உறவுகளே இந்தப் பதிவுகள் எனது உயிரிலும் மேலான மற்றத் தெய்வங்களை தாழ்த்துவதற்காகப் பகிரவில்லை. எல்லாத் தெய்வங்களையும் உயிருக்கு மேலாக விரும்புகிறேன். இன்னும் கூறப்போனால் இவர்கள் தான் எனது முதல் வழிகாட்டிகளும் ஈசனைக் காட்டியவர்களும். சைவசமயம் என்பது ஒரு குடும்பம். இதில் பெரிய தெய்வங்களும் உண்டு சிறிய தெய்வங்களும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணமும் பணியும் உண்டு. ஆனால் இந்தத் தெய்வங்கள் அனைவருமே கும்பிடும் ஒரு கடவுள் என்றால் அது சிவபெருமான் மட்டுமே. இவர்கள் அனைவரும் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். அதேபோல் எல்லாத் தெய்வங்களும் சிவபெருமானை நிறையக் காதலிப்பார்கள். ஆதலால் நாமும் உண்மை அறிந்து எல்லாத் தெய்வங்களையும் காதலிப்போம் போற்றுவோம்.
உங்கள் பாவங்கள் விலகவேண்டும் என்றால் அல்லது ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் நிச்சயமாக சிவபெருமானின் படமோ சிலையோ சிவலிங்கமோ இருக்க வேண்டும். அப்படி உங்கள் வீட்டில் அப்பனின் படம் இல்லை என்றால் நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று அர்த்தம்.
எல்லாத் தெய்வங்களிலும் பார்க்க மிகவும் எளிமையானவரும் தமிழை மிகவும் உயர்வாகக் காதலிக்கும் ஒருவர் யார் என்றால் அவர்தான் எல்லாம் வல்ல நமது சிவபெருமான் மட்டுமே. இவர் தூய அன்பு ஒன்றுக்கு மட்டுமே அடிமை. இவரை வழிபட அன்பைத் தவிர வேறு வழிமுறைகள் ஒன்றுமே தேவை இல்லை. நாயன்மார்களின் வரலாறே இதற்குச் சான்று.
சிவபெருமான் மும்மூர்திகளுள் ஒருவர் இல்லை... மும்மூர்த்திகள் இறக்கும் காலங்களையும் முருகனின் நூலில் கூறி உள்ளார்.
நிறையப் உறவுகள் சிவபெருமானை மும்மூர்த்திகளுள் ஒருவராக நினைக்கிறார்கள். இது ஒரு தவறான தகவல். மும்மூர்த்திகள் என்பவர்கள் பிரமன் திருமால் உருத்திரன். உருத்திரன் வேறு சிவபெருமான் வேறு. 36 தத்துவங்களைத் தாண்டியவர் சிவபெருமான். 36 தத்துவங்களைத் தாண்டாதவர்கள் மும்மூர்த்திகள். திருமால் தாண்டிய தத்துவங்கள் 24. உருத்திரர் தாண்டிய தத்துவங்கள் 31. மும்மூர்த்திகளுக்கு அழிவு உண்டு. ஆனால் சிவபெருமானுக்கு அழிவு இல்லை.
ஒவ்வொரு தெய்வங்களும் எந்த எந்தக் காலங்களில் அழிந்து போவார்கள் என்ற தகவலும் முருகப்பெருமானின் நூலில் உள்ளது.
இந்தக் கலியுகத்தின் கடைசியில் இந்த மும்மூர்த்திகளும் இறந்து போவார்கள்.
சாதாசிவன், மகேசுவரன், பராபரை, முருகப் பெருமான் சித்தர்கள் எல்லோரும் யுகம் நூறில் மாண்டு போவார்கள்.
ஆதாரத்தை சித்தாந்தபடவிளக்கம் நூலிலும் ஞானக்கோவை நூலிலும் பாருங்கள்
ஆதார நூல் : யோக ஞான சாத்திரத் திரட்டு

No comments:

Post a Comment