பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சில பயன்பாடுகள்
----------------------------------------------------------------------
1. புதன், சனிக்கிழமைகளில் அவரவர் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி துயில் ,சாவு தொழில் செய்யும் நேரம் பணம் செலவு செய்தால்,கையிருப்பு பணத்திற்கும் செலவு வந்துவிடும்.
2. கடன் கொடுப்பவரின் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி ஊண்,அரசுத்தொழிலும்,கடன் வாங்குபவரின் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி துயில்,சாவுதொழிலும் செய்யும் நேரத்தில் கடன் பத்திரம் எழுதினால் கடன் உரிய நேரத்திற்குள் திரும்பிவிடும்.
3. தன் பட்சி ஊண் தொழில் செய்யும் நேரத்தில் மாங்கல்ய தாரணம் செய்ய நன்று.அப்பொழுது பெண்ணின் பட்சி அரசு,உண் தொழில் செய்துகொண்டிருந்தால் மிகவும் நல்லது.
4. பூர்வ பட்சம் இரவு நேரத்தில் தன் பட்சி அரசுத்தொழில் செய்யும் நேரம்,தந்தையானவன் தனுக்கு பிறந்த புத்திரனை முதன்முதலாகக்கண்டால்,தந்தையின் ஆயுட்காலம் முழுவதும் மகனானவன் தந்தையிடம் மரியாதையாக நடந்துகொள்வான்.
5. இரவு மூன்றாம் ஜாமத்தில் தனது பட்சி அரசாக இருக்கும் நாளில் தன் மனையாளுடன் முதல் முறையாக கூடினால் ஆயுள் உள்ளவரைக்கும் சுக போகங்கள் இருக்கும்.
6. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது, அவர்களின் பட்சி அரசு ,ஊண் தொழில் செய்துகொண்டிருந்தால் நன்றாக படித்து படிப்பை முடிப்பார்கள்.நடை காலத்தில் சேர்த்தால் சிரமப்பட்டு படிப்பார்கள்,துயில்,சாவு நேரத்தில் சேர்த்தால் படிக்கமாட்டார்கள்.
7. எதிராளி வயதில் சிறியவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் ஊண் தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளி உடல் ஊனமுற்றவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் நடை தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளி வயதில் பெரியவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் அரசு தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளி தன்னைவிட உடல் இளைத்தவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் துயில் தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளியின் பெயரில் உள்ள மொத்த எழுத்துக்களைவிட தன் பெயரில் உள்ள மொத்த எழுத்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் இருவருடைய பட்சியும் ஊண் சாவு புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.

No comments:
Post a Comment