பஞ்ச பட்சிகளின் பொது வரிசை முறை
----------------------------------------------------------
பஞ்ச பட்சிகளின் பொது வரிசை முறையானது பஞ்ச பூதங்களின் வரிசை முறையை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்ச பூதங்களின் வரிசை முறையானது நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் என கீழிருந்து மேலாக பூமியிலிருந்து ஆகாயத்தை நோக்கி அமைகிறது. பஞ்ச பட்சி சாஸ்திரமானது உயிராற்றல் சம்பந்தமான ஒரு சாஸ்திரமாகும். அதாவது பஞ்ச பூத தத்துவங்களால் ஏற்படும் உயிர் ஆற்றல் சுழற்சி முறையை விளக்குவதே பஞ்ச பட்சி சாஸ்திரமாகும். இதன் அடிப்படையில் பஞ்ச பூதங்களின் குறியீடுகளாக தமிழ் உயிர் எழுத்துக்களை நிர்ணயித்தார்கள் சித்தர்கள். தமிழ் உயிர் எழுத்துக்களில் குறில் வடிவங்களான அ-இ-உ-எ-ஒ என்பவை முறையே நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் இவைகளைக்குறிக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் சித்திர எழுத்துக்களாகும். அதாவது விலங்குகள்,பறவைகள் இவைகளின் உருவ அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது தமிழ் எழுத்துக்களாகும். உயிரினங்கள் பல உலகில் இருந்தாலும் பறவைகள் மட்டுமே நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் என அனைத்து நிலைகளிலும் சஞ்சரிக்கக்கூடியவை என்பதால் தமிழ் உயிர் எழுத்துக்களுக்கு உருவம் கொடுத்த பறவைகளை பஞ்ச பூதங்களுக்கு குறியீடுகளாக சித்தர்கள் நிர்ணயித்துள்ளார்கள்.
இதன்படி
வல்லூறு உண்ணும்போது "அ" போலவும்
ஆந்தை உண்ணும்போது "இ" போலவும்
காகம் உண்ணும்போது "உ" போலவும்
கோழி உண்ணும்போது "எ" போலவும்
மயில் உண்ணும்போது "ஓ" போலவும்
காட்சியளிப்பதால் உயிரெழுத்துக்கள் மற்றும் பஞ்ச பூதங்களின் வரிசை முறையில், பட்சிகள் பொதுவாக வல்லூறு-ஆந்தை-காகம்-கோழி-மயில் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment