Monday, 3 September 2018

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ ரகசியங்கள்(பகுதி-6)

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ ரகசியங்கள்(பகுதி-6)
***************
********

(நன்றி அண்ணாமலை சுகுமாரன் ஐயா...)

8) உயிர்க்குறுதி எல்லாம் உடம்பின் பயன்
    அயிர்ப்பின்றி ஆதியை நாடு

இம் முறை ஔவைப் பிராட்டி அயிர்ப்பின்றி அதாவது அயர்வின்றி அல்லும்  பகலும் அருள் வழியில் ஆதியை நாடி ஓயாமல் முயன்றால் உடம்பின் பயனான உயிர்க்குறுதி எனும் உயிரைப்பற்றிய அறிவு ஞானமாக உதிக்கும் என்கிறார் .
அதாவது உடம்பின் பயன் உயிரை உணர்வதே என்கிறார் .

ஆதி சங்கரர் கூறியபடி நேதி ,நேதி என்று (இது இல்லை ,இது இல்லை)என தெளிந்து இறுதியில் ,
ஒன்றான ஆதியை உடம்பில் உணர்வதேயாகும் .
உடல் வெறும் தசை ,எலும்பு ,நரம்பு குருதி மட்டும்
கொண்ட பிண்டம் அல்ல
உடல் 96 தத்துவங்களால் ஆனது .
உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் ,மூலாக்கினி ,சூரியன் சந்திரன் பிந்து நாதம் இவைகளின் கலைகளை பிராணனுடன் சேர்த்தால் ,பிராணனுடைய பிரகாசத்துடன் இணைந்து பிராணனுக்கு பிரகாசம் அதிகமாவதுடன் ,
பிராணவத்திற்கும் பலத்தைத் தரும் .
கலைகளை எழுப்புவதற்கு பார்வையும் மனமும் ஒன்று கூட்டி லட்சியமாக ஓங்கார உச்சியை பார்க்கவேண்டும் .
இது சுந்தரமாணிக்க யோகீஸ்வரர் கூறிய உரையாகும் .
இதில் இன்னும் முழுமையான தெளிவு பெற திருவடி தவம் என்ற ஒன்றை நாட வேண்டும் .

9) உடம்பினால் பெற்ற பயனாவதெல்லாம்
   திடம்பட ஈசனைத்தேடு
இந்தக்குற்லில்" உடம்பினால் பெற்ற பயனாவதெல்லாம் "
என்பதற்கு பொருள் ஆனைவரும் அறிந்ததே .
வெறுமையாக ஈசனைத்தேடு எனக்கூறாமல் "திடம்பட "
என திறமையாகக்கூறியிருக்கிறார் ஔவைபிராட்டி
திடம்பட என்றால் உறுதியாக , வைராக்கியத்துடன் என பொருள் கொள்ளலாம் .
உடம்பில் உள்ள ஈசனைக் காண நமக்கு உடம்பைப்பற்றி முழுமையாகத் தெரியவேண்டும் .
மேலும் ஈசனை உடம்பில் எங்கு ,இந்தப்பகுதியில் தேடவேண்டும் என்பது புரியவேண்டும்
நமது உடல் 96 தத்துவங்களால் ஆனது .

நமது உடல் ஐந்து வகைப்படும் , அவை
பருவுடல் ,வளியுடல்,மனஉடல் ,அறிவு உடல் , இன்ப உடல் ஆகும் .இதைத்தான் அன்னமய கோசம் ,பிராணமய கோசம் ,
மனோமய கோசம் ,விஞஞானமய கோசம் , ஆனந்த மயகோசம் என சாத்திரங்கள் வகைப்படுத்தியுள்ளது .

இந்த உடம்பை பஞ்சபூத்ததுடன் ஓப்பிடுவார்கள் .
பஞ்சபூத்தால் ஆனதுதான் இந்த உடல் .
பிரபஞ்சமும் பஞ்சபூத்தால் ஆனதுதான்
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலேயும் உள்ளது .
உடலைத்தாங்கும் உறுதியான பாதம் நிலம் ஆகும்
பாதத்தில் இருந்து  கொப்பூழ் வரை நீராகும் .
கொப்பூழ் முதல் மார்பு வரை தீயாகும்
மார்பில் இருந்து தோள்  வரை காற்று ஆகும்
கழுத்துக்கு மேலே தான் ஆகாயம் ஆகும் .

உரமடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீ மிசை கைக் கீழில் கால் ஆம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே.
       இது திருமந்திரம்  கூறும் செய்தி .

நீங்களே பாருங்கள் நம்மைத்தாங்கும் பாதம் கால் முதலியவை உறுதியான மண்  நிலம் ஆகும்
சிறுநீர் விந்து முதலியன உற்பத்தியாகும் பகுதிகொப்பூழ் வரை நீரால் ஆனது
கொப்பூழ் முதல் மார்பு வரை உணவை ஜீரணிக்கும் பகுதி தீயால் ஆனது .
மார்பில் இருந்து தோள்  வரை நமது சுவாசிக்கும் பகுதி காற்றால் ஆனது
கழுத்துக்கு மேலே தான் ஆகாயம் ஆகும் .
எனவே அங்கேதான் ஈசனைத்தேடவேண்டும் .
உடலின் அனைத்து பகுதியிலும் பஞ்சபூதம் விரவி உள்ளது .
இப்போது குறிப்பிட்டது பஞ்சபூதங்களில் எந்த பகுதியில் எந்த பூதம் அதிகம் உள்ளது .
எந்த பூதத்தின் சக்தி எந்த பகுதியில்அதிகம்  உள்ளது என்பதை திருமந்திரத்தில் உள்ளபடி கூறினேன் .
ஒருவாறு ஈசனை உடம்பில் இந்தப்பகுதியில் தேடவேண்டும் என தெளிந்தோம்
உடம்பினைப்பற்றி இன்னமும் அறியவேண்டிய தகவல்கள் பல உள்ளது அவைகளை அடுத்துக்காணலாம் .

10) அன்னத்தால் ஆய உடம்பின் பயனெல்லாம்
      முன்னோனைக் காட்டிவிடும்

அன்னத்தால்ஆயஉடம்பேன்கிறார்ஔவை
ப்பிராட்டி 
நமது உடம்பு ஐந்து அடுக்குகளாலால் ஆனது என்று அறிவோம் .
இந்த ஸ்தூல உடம்பை அன்னமய கோசம் என்கிறோம் .
ஏனெனில் உடம்பு அன்னத்தால் ஆனது , இதையே ஔவைப்பிராட்டியும் அன்னத்தால் ஆய உடம்பேன்கிறார்
அன்னம் என்பது என்ன ?
அன்னம் என்பது ஆகாரம் .
நமது உடம்பு ஐம்பூதங்களால் ஆனது என்பது அறிவோம் .
எனவே ஐம்பூத சாரத்தைக் கொண்ட  உணவை கொண்டால்தான் இந்த உடம்பும் வளரும் .
எனவே நமது ஆகாரமும் ஐம்பூத சாரம் கொண்டதாக அமையவேண்டும் .
பொதுவாக நாம் உணவு என்பது நமது வாயின் வழியாக
உடம்பின் உள்ளே செல்வதையே நினைக்கிறோம் .
அப்படியே நமது விஞ்ஞானம் நமக்கு விளக்கியுள்ளது .

வாயின் வாயின்வழியாக செல்லும் அன்னம் பஞ்ச பூதத்தில் நிலம் என்னும் பூதத்தின் சாரத்தையே அதிகம் கொண்டிருக்கிறது .உடம்பின் கூறுகளில் மண்ணின் பங்கே அதிகம் .எனவே இது ஸ்தூல உடம்பாகிரது .
ஆயினும் உடம்பிற்கு மற்ற பஞ்ச பூத சாரங்களும் தேவை .
வாயால் கொள்ளும் நீரும் நீரின் சாரத்தை உடம்பிற்கு அளிப்பதில்லை .
பின் எப்படி நீரின் சாரம் உடலுக்குள் செல்கிறது ?
அது தோலின் வாழியவே உடலுக்குள் செல்கிறது .
குளித்தால் புத்துணர்ச்சி கிடைப்பதற்கு அதுவே காரணம் .
மேலும் குற்றால அருவி ,மற்ற அருவிகளில் நீர் வேகமாக உடலில் மோதுவதால் அதிக நீரின் சாரம் உள்ளே போகிறது .
நமக்கு உடல் நலமும் கிட்டுகிறது .புனித நதிகளில் நீராட சொன்னதின் காரணமும் இதுவே .
ஹீலர் பாஸ்கர் உட்பட பலரும் வாயால் நீர் உட்கொள்வதைப்பற்றியே பல விளக்கங்கள் வழங்கிவருகின்றனர் .
நல்ல விஷயங்கள் அவர்கள் மூலம் பரவுவது உவப்பானதே .
ஆயினும் நீர் சத்து வாயின் வழியாக மட்டும் செல்வதில்லை .
நமது உடலில் ஐம் பொறிகள் என மெய் வாய் கண் மூக்கு செவி என பொறிகள் அமைந்துள்ளது .
இதில் வாய நிலத்தின் சாரத்தை உட்கொள்கிறது .
மெய் எனும் உடம்பின் தோல் நீரின் சாரத்தை உறிஞ்சிகிறது .
கண் எனும் பொறி தீயின் சாரத்தை ஏற்றுக்கொள்கிறது .
எனவேதான் "கண்ணில் தீ பொறி பறக்கிறது "என சிலரின் பார்வையை வர்ணிக்கிறோம் .
கண்ணாலேயே எரித்துவிடுவார் போன்று இருக்கிறதே என்று கூறுகிறோம் .
கண் தீயின் அம்சம் , பிரபஞ்சத்தில் இருந்து தீயின் சாரத்தை கண் பெறுகிறது ,
மூக்கு சுவாசத்தின் மூலம் காற்றின் சாரமான பிராணனை பெறுகிறது .
செவி பிரபஞ்சத்தில் இருந்து வானத்தின் சாரத்தைப்பெறுகிறது .
இவ்வாறு நமது உடல் ஐம்பொறிகள் மூலம் பஞ்சபூத சாரத்தை அன்னம் எனும் ஆகாரமாகப்ப்பெறுகிறது .
இந்த உண்மைகளை நான் குருவின் அருளால் கூறுகிறேன் .
பெருமை எனக்குரியதல்ல .

இவ்வாறு ஆகாரத்தின்  பயனால் பெற்ற உடம்பின் பயன் எல்லாம் முன்னோனை காட்டிவிடும் என்கிறார்

அதாவது தானே உடம்பு காட்டிவிடுமாம் .
ஈசனை உடம்பு எப்படி தானே காட்டிவிடும் ?

உடம்பில் ஆகாரமாக சென்ற பஞ்ச பூதங்கள் உடம்பின் சரியான இயக்கத்தின் காரணத்தால் ,
நிலம் நீரில் ஒடுங்கி ,
நீர் நெருப்பில் ஒடுங்கி ,
நெருப்பு காற்றில் ஒடுங்கி ,
காற்று ஆகாயத்தில் ஒடுங்கி ,
பிறப்பறுக்கும் உக்தியினால் முன்னோன் எனும் மூலத்தை ,
உடல் காட்டிவிடும் என்கிறார் .

இன்னமும் எழுதினால் விரிந்துவிடும் .
இத்தோடு உடம்பின் பயன் அதிகாரம் முடிகிறது .
அடுத்து சூக்சும உடல் பற்றிக் கூறப்போகிறார்.

அதிகாரம் 3         =    உள்ளுடம்பின் நிலை
****************

21 )கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக்காணலாம் 
      உற்று உடம்பால்  ஆய உணர்வு
   
சென்ற 10 குறளில் உடம்பின் பயன் என்று நமது ஸ்தூல உடல் எனும் பௌதீக உடம்பைப்பற்றிப்பார்த்தோம்
அடுத்த இந்த உள்ளுடம்பின் நிலை எனும் அதிகாரத்தில் 10 குறளில் , உள்ளுடம்பு எனப்படும் சூக்ஷும உடம்பு.பற்றி  ஔவைப்பிராட்டி கூறுவதைக்காணப்போகிறோம்

ஒவ்வொரு  மனிதனுக்கும்  இரண்டு தேகங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல உடம்பு எனும்   பௌதீக உடம்பு,
அடுத்தது உள்ளுடம்புஎனும்  சூக்ஷும உடம்பு.
ஸ்தூல உடம்பு எனும்   பௌதீக உடலை தொட்டு உணர முடியும், அதற்கு எடை, நிறம், உயரம், என்று மற்ற பொருள்களுக்கு உள்ளது போல அனைத்து இயற்பியல் மற்றும் வேதியல்  குணங்களும் உண்டு.  இந்த உடலை  நாம் பார்க்க முடியும், தொட முடியும், நுகர முடியும்,உணரமுடியும்
ஸ்தூல உடம்பில் உணர்வுகளால் தூண்டப்பட்டு நிற்கும் நிலையில், அவை  சூக்ஷும உடம்பில் பதிவு செய்யப்படும்.
நீங்கள் தூங்கும் போதும் , கனவு காணும் போதும் ,கீழ் விழுதல் , ஓடுதல்,  பயந்து போதல்  போன்ற உணர்வுகள் பலவற்றை அனுபவிப்பது இதுதான்.
இந்த சூக்க்ஷும சரீரம் கண்ணுக்குத் தெரியாது, நுண்மையானது, நம் உடலில் எங்கும்  நிறைந்து இருப்பது.
இதுதான் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் இடையே உள்ளது.. மனசு சரி இல்லை என்றால் இது பாதிக்கப்பட்டு உடலும் கெடுகிறது அதற்க்கு  காரணம் இதுதான்
 இனி குறளைக் காணலாம்

உற்று          = ஊன்.றிப் பார்ப்பதனால் தோன்றும்
உடம்பால்  -= உள்ளுடம்புஎனும்  சூக்ஷும உடம்பு.
ஆய            = உண்டாகிய
உணர்வு     = அறிவு
ஊன்.றிப் பார்ப்பதனால் தோன்றும் உள்ளுடம்புஎனும்  சூக்ஷும உடம்பு உண்டாகிய அறிவு கொண்டு ,
கற்கலாம்   =  யாவற்றையும் அறியலாம் ,
கேட்கலாம்   = தொலைவில் நடப்பதைக் கேட்கலாம்
கண்ணார      =  கண்ணாலேயே
காணலாம்      = அறிவையும் உள்ளுடம்பையும் காணலாம் .

ஊன்றிப் பார்ப்பதனால் தோன்றும் உள்ளுடம்புஎனும்  சூக்ஷும உடம்பு உண்டாகிய அறிவு கொண்டு ,
யாவற்றையும் அறியலாம் ,தொலைவில் நடப்பதைக் கேட்கலாம் கண்ணாலேயே அறிவையும் உள்ளுடம்பையும் காணலாம் .
சாதாரணமாக பார்த்தால் தெரிவது ஸ்தூல உடம்பு ,
ஊன்றிப்பார்த்தால் தெரிவது உள்ளுடம்பு என்று கூறுகிறார் என்பது தெரிகிறது
எப்படி ஊன்றிப்பார்ப்பது என பின்னே ஔவைக் கூறலாம்

ஊன்.றிப் பார்ப்பதனால் தோன்றும் உள்ளுடம்புஎனும்  சூக்ஷும உடம்பு உண்டாகிய அறிவு கொண்டு , கண்ணில்லாமல் காணலாம் , காதில்லாமல் கேட்கலாம் ,
புலன்களை பயன்படுத்துவாழும் ஸ்தூல உடம்பின் உணரவைக்கடந்து , உள்ளுடம்பின் உணர்வைபெறுவதே ,
உற்று உண்டாகிய அறிவின் பயன் என்கிறார்.

No comments:

Post a Comment