Monday, 3 September 2018

திருமந்திர கருகட்டல் யோகம்-1

திருமந்திர கருகட்டல் யோகம்-1

ஒரு மனிதன் கருநிலையில் கர்ப்பத்தில்
ஒடுங்கி சிறிது சிறிதாக வளர்ந்து சிசுவாகத்
தோற்றம் பெற்று, வெளிப்பட்டுப் பிறந்து,
வளர்ந்து, வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும்
நிலையில் ஒரு வரலாறு எழுதுகின்ற
அளவிற்கு வாழ்ந்து பிறகு தளர்ந்து சுருங்கி
இறந்து விடுகின்றான்.

இறப்பின்போது உடலிலிருந்து பிரிந்து சென்ற
25 தத்துவங்களும் மீண்டும் ஒன்றாக
இணைந்து புதுப் பிறவி உண்டாகிறது. புதிய
உயிரின் உருவாக்கம், வளர்ச்சி ஆகியவை
குறித்து திருமூலர் கூறும் சூட்சும
ரகசியங்களைக் காணலாம்.

"கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்தும்; மற்று ஓரார்;
திருவின் கருக்குழி தேடிப் புகுந்து அங்கு
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'.
-திருமந்திரம் பாடல் எண்- 454.

பொருள்:
****

பிறவி எனும் பெருஞ் சுமையை
வென்ற ஞானிகள் தங்கள் ஞானத்தால் உணர்ந்து
கொண்ட 25 தத்துவங்களும் மீண்டும்
இணைந்து ஒரு ஆணின் (தந்தையின்) உடலில்
(விந்துவில்) வந்து இணையும். இவ்வாறு
இணைவதை எவரும் அறியமாட்டார். (மற்று
ஓரார்).

இவ்வாறு 25 தத்துவங்களும் இணைந்த
ஆணின் விந்து பெண்ணின் (திருவின்)
கருப்பையைத் தேடிச் சென்று புகும். அங்கே
அது ஆண் - பெண் என இரு உருவாக இருக்கும்.

மிக மிக நுட்பமான பல சூட்சும உண்மைகளும், மருத்துவ விஞ்ஞான உண்மைகளும் இந்தப் பாடலில் பொதிந்து/கிடக்கின்றன.

25 தத்துவங்களும் ஆணின் உடலில் புகுந்து
விந்துவில் நிறைந்து, விந்திலுள்ள
உயிரணுக்களுக்கு சூரியனால்
உயிரூட்டுகின்றன.

சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றும் போது
(27.32 நாட்கள்)
பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும்
முட்டையுடன் இந்த உயிரணுக்கள்
இணையும்போதுதான் புதிய உயிர் (கரு)
உருவாகும். ஆனால் 25 தத்துவங்களும்
பெண்ணின் உடலில் நுழைவதில்லை.
பெண்ணின் உடலில் உருவாகும் சினை
முட்டை உயிரற்றது! அதற்கு உயிரூட்டி,
அதை ஒரு கருவாக மாற்ற விந்தணுக்கள்
தேவை!

இந்த இரு கருத்துகளையும் சற்று அலசிப்
பார்க்கலாம். ஒரு பெண் பருவமடைந் தது
முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை,
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றும் போது
ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி
வெளியே வருகிறது. இந்தக் கருமுட் டைக்கு
தானாகவே நகரும் திறன் கிடையாது.

சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை
கருப் பைக் குழாயினால் உறிஞ்சிக் கொள்ளப்
பட்டு, கருப்பைக் குழாயின் தசை
அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி
கருப்பை யினுள்ளே நுழைகிறது. இரண்டு
அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு
வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால்
மட்டுமே அந்த முட்டை சினையடைந்து
தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும்.

விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு
ஏற்படாவிடில், அந்த முட்டை
கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து
போகிறது; மாதவிடாயின்போது
வெளியேறிவிடுகிறது.
உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய
இரண்டிற்கும் அடிப்படையான வித்தியாசம்
என்ன? அசைவு அல்லது இயக்கம். ஜடப்
பொருட்கள் தானே இயங்கும் அல்லது நகரும்
(அசையும்) ஆற்றல் இல்லாதவை. உயிருள்ள
வற்றில் தானாக அசையும், நகரும் திறன்
உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது
கருமுட்டை அசைவற்றது; தானே நகரும் திறன்
இல்லாதது. விந்தணுக்கள் தானே நகரும் திறன்
கொண்டவை. எனவேதான் திருமூலர் இந்த
விந்தணுக்கள் பற்றி,

"திருவின் கருக்குழி தேடிப் புகுந்து...
...ஓடி விழுந்ததே'
என்கிறார்.

இன்னும் ஆழமாக தொடரும்.....

No comments:

Post a Comment