மணத்தக்காளிக் கீரையின் மகத்துவம்
மணத்தக்காளிக் கீரையைச் சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.
இந்தக் கீரையின் காயைச் சமைத்துச் சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட கபநோய்களும், வாத நோய்களும் சரியாகும்.
குடல் புண்களை ஆற்றுவதில் கீரையில் மணத்தக்காளிக் கீரை முன்னோடியாக உள்ளது. இந்தக் கீரையில், புரதச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைய உள்ளன. வாய்ப்புண், அச்சரம் மற்றும் கால்சியக் குறைபாடுளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. உடல் உறுப்புகளில் எங்கு புண் இருந்தாலும் ஆற்றும் வல்லமை இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால், சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் முற்றிலும் குணமாகும்.
No comments:
Post a Comment