#ரா_ரா.. குறித்த ஒரு சில விளக்க வரைபடங்கள்..
#நிபிரு என்று ஒரு கோள் இல்லவே இல்லை என்பதும்., நிபிரு இருப்பது உண்மை என்றும் இரு மாறுபட்ட நிலைப்பாடுகள் உலவுகின்றன. யான் முன்பே கூறியதைப்போல இதை நம்புவது என்பதை அவரவர் பொறுப்பிற்கே விட்டுவிடுகின்றேன்..! ரா..ரா.. 4 ம் பகுதி நாளை தர முயற்சிக்கின்றேன் அதற்கு முன்பாக நிபிருவின் சுற்றுவட்ட பாதை குறித்த வரைபடங்களை வழங்கியுள்ளேன்..
மு.செ
#ரா..#ரா.. (1)
ரா -> ராத்சைல்ட்..
ரா -> ராக்ஃபெல்லர்..
ரா -> ராக்ஃபெல்லர்..
இந்த ரா ரா தொடருக்கான ஒரு சிலரின் எதிர்பார்ப்புகள் எனக்கு மிகப்பெரிய கவலையை வழங்கியது என்று நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இவர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது என்ற கவலையே அது.! இருப்பினும் ஒருவாறாக என்னை தயார் செய்துகொண்டு, நாம் கற்று, அதனை பல்வேறு விஷயங்களுடன் பொருத்தி பார்க்கையில் எனக்கு கிடைத்த பதில்களே இவை.
ஆதிகால மனிதன் 6ம் அறிவான பகுத்தறிவை தன்னுள் பெற்றிருக்கவில்லை. பசிக்கு வேட்டையாடுவது, குகைகளில் தங்குவது, விலங்குகளிடமிருந்து தன்னை காப்பது, கூட்டமாக நாடோடிகளாக திரிவது......... என்று இதுபோன்ற எண்ணற்ற முறை உங்களால் வாசிக்கப்பட்ட, மனனமே செய்யப்பட்ட ஆதிகால மனிதனின் வரலாற்றை மீண்டுமொருமுறை சொல்லி உங்களை மண்டை காய விடப்போவதில்லை.!
(#பட்டர்ஃப்ளை_எஃபெக்ட் போல இது எங்கோ துவங்கிரா..ரா..வில் முடியும்.. தொடர்ந்து வாசியுங்கள் புரியலாம்..)
6 ம் அறிவான பகுத்தறிவு என்பது, எந்தவொரு செயலிலும் உள்ள உண்மையை அறிய, அதிலுள்ள பொய்யை அச்செயலிலிருந்து விலக்குவதாகும். இப்படி எந்தவொரு உண்மையையும் உணராமல் மனிதனானவன் பசிக்கும்போது வயிற்றை நிரப்ப பிற விலங்குகளை வேட்டையாடினான், கூட்டத்தை பெருக்கவே குழந்தைகளை பெற்றான், ஆயுளை குறைவாக பெற்று அல்பாயுளில் எங்கோ சென்றான். இப்படியாக விலங்கோடு மற்றொரு விலங்கினமாக இப்பூமியில் வாழ்ந்தபோது, #நிபிருஎன்ற நமது சூரியக்குடும்பத்திக்கு சம்பந்தப்படாத கோள் ஒன்று, பூமிக்கருகில் வந்ததாம், தொடர்ந்து காட்டுவாசியாக திரிந்த மனிதன் மரபணு மாற்றப்பட்டு 6ம் அறிவான பகுத்தறிவை பெற்றான்.! இதனை பற்றி நாமறிய #சுமேரிய_நாகரீகம் பற்றி நீங்கள் அறிய வேண்டியது அவசியம்.! சுமார் 5000 வருடங்களுக்கும் முந்தைய நாகரீகம் இன்றைய #ஈரான், #ஈராக்பகுதிகளை உள்ளடக்கிய நாடாக, நாகரீகமாக விளங்கியது.
#சக்கரம் என்ற ஓன்றை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த நாகரீகம்தான் இந்த சுமேரிய நாகரீகம்.! சக்கரம் இன்றளவில் மிகவும் பயனுள்ளது என்பதை நாம் நன்கறிவோம்தானே.? சுமேரிய வரைபடம் ஒன்றையும் வழங்கியுள்ளேன்..
மு.செ
அடுத்தது -> நிபிரு குறித்த சுமேரிய குறிப்புகள்.. (நிபிரு ஓர் சதிக்கோட்பாடு என்றும், ஆதாரம் இல்லை என்போரும் உண்டு., நிபிரு உண்டு என்போரும் உண்டு..! நாம் கற்றதை பொருத்திப் பார்க்கின்றோம் அவ்வளவுதான்.. ராத்சைல்ட் மற்றும் ராக்ஃபெல்லர் இருவரும் 10 எபிஸோட்கள் கழித்தே வருவார்கள் என நினைக்கின்றேன்..)
#ரா_ரா.. (2)
பண்டைய காலங்களில் மிகுந்த முன்னேற்றம் கண்ட நாகரீகங்களில் தலைசிறந்து விளங்கிய நாகரீகங்களில் ஒன்றே இந்த சுமேரிய நாகரீகம். முந்தைய பதிவில் கொடுத்த வரைபடத்தில் காணப்படும் 2 வளமான ஆறுகளால் இப்பகுதியே செல்வச்செழிப்பாக திகழ்ந்தது. சரி விஷயத்திற்குள் செல்வோம்..
காட்டு விலங்குகளோடு விலங்காக திரிந்த மனித விலங்குகள் நாகரீகம் என்றால் தனக்கு சம்பந்தமற்ற ஒன்று என்றே கிடைத்ததை புசித்தும், சாவிற்கு அஞ்சியும் வாழ்ந்தது. அப்போது, பூமிக்கு மட்டுமல்ல நமது சூரியக்குடும்பத்திற்கே எந்தவொரு சம்பந்தமுமற்ற கோள் ஒன்று சூரியக்குடும்பத்திற்கருகே வந்தது. இதன் பெயர் #நிபிரு என்று சுமேரிய குறிப்புகள் கூறுகின்றன.! (நம்ப கடினம் என்றாலும், சுமேரிய குறிப்புகளில் அப்படிதான் உள்ளது.!) அப்படி அருகே வந்த நிபிருவிலிருந்து 7 உயிரினங்கள் பூமியில், சுமேரியாவில் தரையிரங்கியதாகவும், அவைகள் புதிய காலனியை உருவாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.!
பூமிக்கு வந்த ஏலியன்கள் (அப்படிதானே குறிப்பிட வேண்டும்.?) பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்க்கையானது அற்பாயுளில் முடிய காரணம் "சூரியனிடமிருந்து வெளிவரும் காஸ்மிக் மற்றும் புறா ஊதாக்கதிர்களின் தாக்கமே காரணம் என்பதை உணர்ந்து, எங்கே அவற்றால் தமக்கும் ஆபத்து நேருமோ என்று அஞ்சி, பூமிக்கு #பாதுகாப்பு_கவசம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடிவெடுத்ததாம்.! பாதுகாப்பு கவசத்தை தயாரிக்க #தங்கத்தினை அன்றே #நானோ_தொழில்நுட்பம் மூலம் மிக மிக சிறு சிறு துகள்களாக்கி #ஓஸோன் என்ற படலத்தை உருவாக்கியதாம்.! வேற்று கிரகமான நிபிருவிலிருந்து பூமிக்கே வர முடிந்த ஏலியன்களால், நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது #ஜூஜூபி அதுதான் இலந்தை பழக்கொட்டையாம்.!
சரி தங்கத்தை எப்படி எடுப்பது என்று யோசித்தபோது, நாம் ஏலியன்களின் கண்களில் பட்டோமாம். "இவர்கள் அதற்கு சரிப்பட்டு வருவார்கள் போல தெரிகின்றதே" என்று எண்ணி, அன்று லட்சங்களில் வாழ்ந்த மனித விலங்குகளை தங்களது நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ள நம்மவர்களை சிறைபிடித்தார்களாம்.! ஸ்பேஸ் ஷிப் வைத்திருக்கும் அவர்களுக்கு ஆயுதங்கள் மூலம் நம்மை கட்டுப்படுத்துவது சர்வ சாதாரணமல்லவா.? சரி தங்கத்தை வெட்டி எடுக்க ஆணையிட்டால் மனித விலங்குகளுக்கு புரியவில்லை. இது ஏதடா புதுத்தொல்லை என்று ஏலியன்கள் கவலைகொண்டபோது, தீவிர ஆலோசனைக்கு பின்னர் மனித விலங்கை #ப்யூர்_மனிதனாக சற்று அறிவில் மேம்படுத்த அவனது #மரபணுவை மாற்ற முடிவு செய்தனவாம். அதாவது, மனிதனை தனது விருப்பமே இன்றி மாற்றும் அதிகாரத்தை ஆயுதம் மூலம் பெற்றதாம்.! மரபணு மாற்றம் நிகழ்த்தப்பட்டது.! அவ்வாறான அதிகாரம் படைத்த அந்த 7 ஏலியன்களும் #அநுனாக்கிகள் என்றழைக்கப்பட்டதாக குறிப்புகள் உரைக்கின்றன.! கீழே அந்த அநுனாக்கியின் படத்தை பகிர்ந்துள்ளேன்..
மு.செ
அடுத்து -> மனித மரபணு மாற்றம் + தங்கத்தை வைத்து ஓஸோன் படலம் அமைத்தல்..(தங்கம், ஒஸோன் அமைப்பதற்கு ஏன் பயன்படுகின்றது என்ற விளக்கம்..!)
#ரா..#ரா.. 3 (3,4 நாட்கள் தாமதமான ரா..ரா..)
(முந்தைய தொடர்களை படித்துவிட்டு, ரா..ரா.. 3 ஐ படிப்பதே புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கலாம்..)
ரைட்..
#நிபிரு என்ற கோளானது நமது சூரியக்குடும்பத்திற்கருகாமையில் வரும் நிகழ்வானது 3500 - 3600 வருடங்களுக்கொருமுறை நடக்கும் ஓர் அபூர்வ நிகழ்வாகும்.! (நாம்தான் நமக்கு புரிபடாததை #ஆச்சர்யம், #அபூர்வம் போன்ற ஒற்றைச்சொற்களால் முடித்து விடுவோமே.?) அப்படி ஒருமுறை நிபிரு நமது சூரியக்குடும்பத்திற்கு அருகாமையில் வந்ததாக 5,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த #சுமேரியர்கள், நாம் யாராக இருக்கலாம் என்று அறிந்து குறிப்புகளாக "போனால் போகின்றது என்று" விட்டு சென்றிருக்கலாம்.! 5,000 வருடங்களுக்கு முன்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளேனே தவிர மிகச்சரியாக என்று குறிக்கவில்லை.. சற்று முன்னராக இல்லை பின்னராகக்கூட இருக்கலாம்..
#தங்கம்..
இன்றைய அளவில் தங்கம் ஓர் மதிப்பு வாய்ந்த ஓர் உலோகமாக மாற்றப்பட்டுள்ளதன் காரணங்களை #ராத்சைல்ட் ன் வருகையின்போது அறிய அதற்கு தனியாக ஓர் கட்டுரையை இயற்ற உள்ளேன். (அதுவரை நண்பர்கள் பொறுமை காக்க வேண்டுகின்றேன், டைரக்ட் 14 ம் கேள்வி கிடையாது..!) நிபிருவிலிருந்து பூமியில் தடம்பதித்த 7 #அநுனாக்கிகள், பூமியின் தட்பவெப்ப நிலையைக் கண்டு அஞ்சின காரணம் புறா ஊதாக்கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்களின் தாக்கமானது அதிகளவில் இருந்தமையால் பூமியில் வாழும் விலங்குகளின் ஆயுளானது இன்றைய சாசரியைவிட மிக குறைவாக இருந்தது. எங்கே இந்த கதிர்வீச்சுகளால் தாங்களும் தாக்கப்படலாமோ என்று அஞ்சி, எண்ண செய்யலாம் என்று யோசித்தபோது கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படாமலிருக்க தங்களுக்கு கவசம் அணிந்துகொள்வது என்று முடிவானது., ஆனால் எந்த நேரமும் கவசத்துடன் திரிவது எரிச்சலை உண்டாக்கும் என்று #ஒட்டுமொத்த_பூமிக்கே #கவசத்தை அணிவிக்க எண்ணி முடிவானது.! (மீண்டும் நமக்கு ஆச்சர்யம்தான் அது எப்படி சாத்தியம் என்று.!) அதற்கான ஓர் உலோகம் பூமியில் ஒரளவிற்கு கணிசமாக கிடைப்பதை அறிந்துகொண்டன. இந்த உலோகத்தை #நானோ_தொழில்நுட்பம் மூலம் சிறு சிறு துகள்களாக பிரித்து பூமிக்கு நிரந்தரமாக ஓர் கொட்டைகையை/கூரை போட நிச்சயம் செய்தன. அப்படி பூமிக்கு கவசமாக, சூரியனின் புறா ஊதாக்கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்களிடமிருந்து காக்க பயன்படுத்தப்பட தேர்வு செய்யப்பட்ட உலோகம்தான் தங்கம்.!
#தங்கம்_ஏன்..?
பிற உலோகங்களை வேண்டாமென்று புறந்தள்ளிவிட்டு, தங்கம் மட்டும் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வியானது வருமென்பதால், தங்கத்திற்கு கதிர்வீச்சுகளை விலக்கும் தன்மை உண்டு.! நேர்மறை கதிர்களை ஈர்க்கும் மற்றும் எதிர்மறை கதிர்களை விலக்கும் ஆற்றலுடையது.! ரிஃப்ளெக்டர்.! "தென்னிந்தியாவில் தமிழர்கள் அதிகளவில் தங்க நகைகளை அணிவது சும்மா பந்தாவிற்கு என்று எண்ணினால் அது சரியல்ல., தங்க நகைகளை அணிவது நேர்மறை கதிர்களை ஈர்க்கவும், அதே சமயம் எதிர்மறை கதிர்களை விலக்கவும்தான் என்பதை அறிந்தே தமிழர்கள் குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை அதிகமாக அணிய தொடங்கினர்.! ஏன் இறைவனின் சிலைகளுக்கும் தங்க கவசம் அணிவிப்பது எதிர்மறை கதிர்களை இறை சிலைகள் விலக்கவே.! இதில் ஆன்மீகம் மட்டுமல்ல அறிவியலும் உள்ளது என்பதே உண்மை.!". தங்க நகைகளை அணிபவர்களின் முகத்தில் கவலைகள் தென்படுவது குறைவாகவும், கதிர்வீச்சுகள் மூலம் உருவாகும் நோய்களின் தாக்கம் வெகுகுறைவாகவும் இருக்கும். இந்து கோவில்களில் கலசங்கள் மற்றும் கொடிமரங்கள் தங்கத்தில் அமைக்கப்படுவதே இதன் பொருட்டுதான் என்பதே எனது #கற்றலின்_ஒப்பிட்டு_பார்த்தல்.! (அதற்காக இனி யாவரையும் உற்று பார்க்க வேண்டாம்.! 14 விநாடிகளுக்கு மேல் பெண்களை உற்று நோக்கினால் அது குற்றச்செயலாம்.!) அதற்காக #வரிச்சியூர்_செல்வம் மாதிரி கழுத்தே தெரியாமல் நகைகள் அணிவது #பந்தாவே.! ஆக(ஸ்டாலின்.!) தங்கம் கதிர்வீச்சை விலக்கும் ஆற்றலுடைத்து..!
#ஓயேஜர்..
தங்கத்திற்கும் இன்றைய பூமியின் அயலானான #இன்டர்ஸ்டெல்லர் பயணி ஓயேஜரானது 1400 கோடி கி.மீ களை வெற்றிகரமாக கடந்து, நமது சூரியக்குடும்பத்தை தாண்டிய முதல் விஞ்ஞான கருவி என்ற பெயரை பெற்றுள்ளது.! அப்படியான ஓயேஜர் பூமியின் வரைபடம் மற்றும் நமது பால்வெளியின் #முகவரியை ஓர் #தங்கத்தகட்டில் பதித்து, தன்னுடன் கொாண்டுசென்றுள்ளது.! பிற உலோகங்களில் வரைபடம் மற்றும் பால்வெளி முகவரியை குறிக்காமல் ஏன் தங்கத்திலான தகட்டில் குறிக்கப்பட்டது.? கதிர்வீச்சு அபாயங்களிலிருந்து தப்பவே.! இப்போது புரிகின்றதா தங்கம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்று.? #எம்ஐபி என்ற படத்தில் நிலவிற்கு செல்லும் அப்போலோ ராக்கெட் மூலம் ஏலியன்கள் பூமிக்கு ஓர் கவசத்தை அணிவிப்பதைப்போல காட்டுவதே இதன் தழுவல்தான்.!
சரி இந்தளவிற்கு மதிப்பு வாய்ந்த தங்கத்தை வெட்டியெடுக்க 7 நபர்களான நாம் பற்றாதே என்ற அடுத்த கவலை வந்தபோது, அன்றைக்கிருந்தவைகளிலேயே சுமரான அறிவாளியான மனித விலங்கை பயன்படுத்தலாம் என்றால், நாம் எள் என்றால் மனித விலங்கு எண்ணெய் என்கின்றானே வடிவேலு மாதிரி என்று நிறைய யோசித்து, தங்களுக்கு சாதகமான செயல்களுக்கு மனித விலங்கை மாற்ற முடிவு செய்தனவாம்.! அதுவரை 5 அறிவோடு எதிர்காலம் பற்றிய எந்த கவலையுமின்றி வாழ்ந்த அந்த விலங்கிற்கு #6ம்_அறிவான #பகுத்தறிவை புகுத்த எண்ணியது.! மனித விலங்குகளை பிடித்து மரபணு மாற்றத்தை செய்தது.! வெகு விரைவில் மனித விலங்கு, தனது விலங்கை துறந்து#மனிதனாகின்றான்.!(இதனை ஆதாம், ஈவாளுடன் ஒப்பிடுவதுகூட சரியான சிந்தனை என்பேன் என்வரையில்.! ஏனெனில், சாத்தான்(.?) பாம்பு வடிவிலே வந்ததாக ஓர் கூற்று உண்டு நண்பர்களே.!) இன்று நமது ஊரில் விற்கப்படும் #கோக்கும் நமது மரபணுவை மாற்றும் வல்லமை உடையது என்பது நீங்கள் அறிவீர்களா.? சாதாரண கோக் குளிர்பானம் நமது மரபணுக்களை மாற்ற காரணமே மனிதனை #அடுத்தக்கட்ட_பரிணாம #வளர்ச்சிக்கான_முயற்சியோ என்பது எனது மற்றொரு கற்றல் ஒப்பீடு.! கோக்கிற்கும், அநுனாக்கிகுமான ஓர் உறவை இத்தொடரின் இறுதியில் கூற எண்ணியுள்ளேன் அதனால் நீங்கள் இப்போதே குழப்பிக்கொள்ள வேண்டாம் நண்பர்களே..
மரபணு மாற்றப்பட்டு மனிதனானவன் சிந்திக்க துவங்குகின்றான்., எதையும் பகுத்து ஆராயும் அறிவை பெறுகின்றான்.! அநுனாக்கிகளை தங்களை ரட்சிக்கும் வல்லவர்களாக தூக்கிவைத்து கொண்டாடுகின்றான், அநுனாக்கிகளின் கட்டளைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தங்கத்தை வெட்டியெடுக்கும் வேலையை துவங்குகின்றான்.! தங்கம் மதிப்பை பெறத்துவங்குகின்றது ஆனால், மனிதனுக்கு தாங்கள் ஏன் தங்கத்தை வெட்டி எடுக்கின்றோம் என்று புரியாமல்..!
கீழே அநுனாக்கிகளை பாம்புகளாகவும், பாம்புகளின் பிணைப்பை டிஎன்ஏ உடன் ஒப்பிட்ட படமும் பகிரப்பட்டுள்ளது..
மு.செ
#ரா_ரா.. #4..
நிறைய தாமதத்திற்கு எனது பரபரப்புடன் அமைந்த நாட்களை பலிகெடாவாக்கிவிட்டு, இந்த ரா..ரா #4 ம் பகுதியை தொடர்கின்றேன், முந்தைய பகுதிகளை தொடர்ந்து படித்தவர்கள் இப்பகுதியை தொடர்ந்து படிக்க துவங்குங்கள், புதியவர்கள் முந்தைய பகுதிகளை படித்துவிட்டு தெடர்ந்தால் புரியலாம்.!
நேற்றைய ரா..ரா.. தொடர் குறிப்பாக வழங்கிய வரைபடத்தை ஒரு சிலர் பார்த்திருப்பீர்கள்.. அதன் சுற்றுவட்ட பாதையே தனியொரு சுற்றுவட்ட பாதை என்பதை அறிந்திருப்பீர்கள் மற்றும் நிறைய பேர் இது சாத்தியமா என்றும் ஐயத்துடன் இருக்கலாம்.! சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா என்பதைவிட சுமேரிய குறிப்புகள் மூலம் கிடைத்த சூரியக்குடும்ப விவரங்களே இங்கு வழங்கப்பட்டுள்ளன.! மேலும், இந்த நமது சூரியக்குடும்பத்தையே முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை நமது அறிவியலால்.! (ஹப்பிள் டெலஸ்கோப்பே இன்றைய பூமியின் மிக சக்திவாய்ந்த, துல்லியமான தொலைநோக்கி என்பது குறிப்பிடத்தக்கது. சீனா தற்போது அதனை விஞ்ச முயற்சிக்கின்றது என்பது போனஸ்..)
#அநுனாக்கிகள் மனிதவிலங்கின் மரபணுவை மாற்றம் செய்து விலங்கை மைனஸ் செய்துவிட்டு, #மனிதனாக்கியது.! முதலில் அநுனாக்கிகள் என்று ஏன் கூறப்பட்டது என்றால், அநு என்றால் #ராஜ., #னாக்கி என்றால் சுமேரிய மொழியில் #நாகம் என்றும் பெயர்.! நமது தமிழிலும் நாகம் என்றால் #பாம்பு என்றே பெயர்., இங்கு ஓர் ஒப்பீடு -> பைபிளில் #ஆதம்_ஏவள், பாம்பு வடிவ #சாத்தான் என்பதே அந்த ஒப்பீடு.! அதே போல சுமேரிய மொழி தாக்கத்தினை, நிறைய தமிழ் வார்த்தைகளாக தமிழிலும் காணலாம்..
சராசரியான விலங்கிற்குரிய அம்சங்களுடன் வாழ்ந்த மனிதவிலங்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டு, மனிதனாக மாறினான். இதன் உபயதாரராக திகழ்ந்தது அநுனாக்கிகள் என்ற நிபிரு கிரகவாசிகளே என்கின்றது சுமேரிய குறிப்பு. மனிதனாக பிரமோசனடைந்த அவன் தன்னை மனிதனாக்கிய எசமான்களான 7 அநுனாக்கிகளுக்கும் விசுவாசமானவனாக திகழ உறுதிபூண்டான்.!
மனிதனாக மாறிய அந்த விலங்குகள் தங்களை சிறிது சிறிதாக நாகரீகமானவைகளாக மாற்ற #சிந்திக்க_துவங்குகின்றது.! பசிக்காக மட்டுமே வேட்டையாடிய விலங்குகள் புலாலால் தங்களது ஆயுளானது
குறைகின்றது என்பதை எசமானர்கள் கூறக்கேட்டு, தாங்கள் வசிக்க குகைகளை விடுத்து வீடுகளை கட்டத்துவங்குகின்றன., கூடவே #விவசாயம்., #மீன்பிடித்தல்., உலோகங்களை பயன்படுத்துவது என மனிதனது செயல்பாடுகள் விரிவடைந்தது அநுனாக்கிகளின் உதவியுடன் செய்ய துவங்குகின்றது..!
குறைகின்றது என்பதை எசமானர்கள் கூறக்கேட்டு, தாங்கள் வசிக்க குகைகளை விடுத்து வீடுகளை கட்டத்துவங்குகின்றன., கூடவே #விவசாயம்., #மீன்பிடித்தல்., உலோகங்களை பயன்படுத்துவது என மனிதனது செயல்பாடுகள் விரிவடைந்தது அநுனாக்கிகளின் உதவியுடன் செய்ய துவங்குகின்றது..!
மனிதனாக மாறிய பின் மனிதனது இனப்பெருக்கமானது பெருகவும்., அநுனாக்கிகளின் ஓஸோன் படலத்தின் உதவியோடு சூரியனின் புறஊதாக்கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொண்டு, அன்றிருந்த சராசரி ஆயுளைவிட மிக அதிகமான ஆயுளை பெறத்துவங்கின., அநுனாக்கிகளும் அனுமதித்தன அதாவது, மனிதன் ஆயுள் அதிகரிப்பது தனக்கு அவன் இன்னும் சேவை(புளியோதரையல்ல..!) செய்வது தங்களுக்கே நன்மை என்று மனித இனம் பெருகுதை வரவேற்றன.!
வெகுவிரைவில் மனித இனம் நன்கு பெருகத் தொடங்குகின்றது., எண்ணிக்கையில் மாற்றம் நிகழ்ந்தது. பிற விலங்குகளை தனக்கு கீழாக கொண்டு வந்து, அவைகளின் எசமான்களாக நினைத்து மகிழ்ந்தான். மனிதர்களுக்கிடையில் குழுக்கள் உருவாகின, ஆனால் மனிதன் தனது #ராஸ்ஸாவாக (ராஜாவாக) அநுனாக்கிகளை ஏற்றுக்கொண்டான். அநுனாக்கிகளும், மனிதனை தனது ஆளுகையின் கீழ் வைத்து, அவனை வைத்து பல்வேறு வேலைகளை செய்துகொண்டது. அன்றைய பூமியில் அநுனாக்கிகள் தலைமையாகவும், மனிதன் அதற்கடுத்த நிலையிலும் நீடித்தான்.! தொழிற்நுணுக்கங்களை கற்றறிந்தான் #கணிதம்., #அறிவியல்., #ஆட்சி செய்தல் என படிப்படியாக முன்னேறினான். அநுனாக்கிகளும் எண்ணிக்கையில் பெருகின் ஆனால்., மனிதனளவு இல்லாவிட்டாலும் சுமாராக 10,000 வரை பெருகியதாக கூறப்பட்டுள்ளது..
6ம் அறிவைப்பெற்ற மனிதன் எதனையும் பகுத்தறிய துவங்கிய மெல்ல மெல்ல பூமி தங்களுடையது, இந்த ராஸ்ஸாக்களான அநுனாக்கிகள் #வந்தேறிகள் என பொறாமையோ இல்லை நாட்டுப்பற்றோ மெல்ல மெல்ல தலைதூக்குகின்றது. அநுனாக்கிகள் பூமியை காலனியாக்கவே வந்ததாகவும், மனிதர்களான நம்மை அடிமையாக்கி அவைகளுக்கு தேவையான #தங்கத்தை நம்மைவைத்தே திருடி நிபிருவிற்கு கடத்த உள்ளதாகவும், இந்த காலனியாதிக்கத்தை எதிர்க்கவும் செய்ய ஆரம்பித்தான். சில இடங்களில் துவங்கிய இப்பிரச்சனை பல இடங்களுக்கு பரவியது. இது தீவிரமாக துவங்கியது, அநுனாக்கிகளும் எவ்வளவு முயன்றும், ஆயுதப்பிரயோகம் செய்தும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை கண்ட அநுனாக்கிகள்., ஓர் முக்கிய முடிவை எடுத்தனவாம்.!
அநுனாக்கிகளுக்கும், அவர்களால் 6ம் அறிவை பெற்ற மனிதனுக்குமிடையே உருவான பிரச்சனைகள் ஒன்றும் உடனடியாக துவங்கவில்லை, நூறு வருடங்களாவது ஆகியிருக்கலாமாம்.! அந்த சமயம் மனிதர்களில் ஒரு சிலர் அநுனாக்கிகளுக்கு #விசுவாசமாக திகழ்ந்ததால் அவர்களை அநுனாக்கிகள் தங்களது விசுவாசமிக்க நலவிரும்பிகளாக ஏற்று அவர்களது மரபணுவை #ஸ்பெசலாக மாற்றியதாகவும், அவர்களே ராஸ்ஸ ரத்தம் என்றும் அழைக்கப்பட்டதாகவும் ஓர் கூற்று திகழ்கின்றது.!
மு.செ
அடுத்து ராஜரத்தம்., ஒப்பந்தம்., உலகம் ஒப்படைப்பு., என தொடரும்..
(ஒரு வழியாக ராரா திரும்ப களம் காண்கின்றது, நிறைய நண்பர்கள் மறந்தே போயிருப்பார்கள்.! அதற்காக வருந்துகின்றேன்..)
#ஏறத்தாழ_3500_வருடங்களுக்கு_முன்பு..
நாடு பிடித்து தனது பராக்கிராமத்தை பறைசாற்றும் எண்ணம்கொண்ட மன்னர்களால் அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனங்கள் இந்த உலகில் ஏராளம். அப்படியான பேராசை கொண்ட மன்னர் ஒருவரால் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நாடும், அதன் மக்களும் சிதறுண்டு போயினர். பலத்தின் முன் பலவீனம் அடங்கிப்போவதே சரியானது., "அரசனுக்கெதிரே நீ கத்தியை உயர்த்தினால், அவனை கொன்றே ஆகவேண்டும்.!" என்பது உண்மையே.! அதனால் வலுவின்றி கிடந்த அந்த சமூகம் சிதறுண்டு போனது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. #ஆனால்,
அந்த மன்னனின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் ஓர் குடும்பமும் பாதிக்கப்பட்டது. அக்குடும்பம் பெற்றோர் இருவர், வாரிசுகள் 12 பேர் என பெரியதானது. இக்குடும்பம் சிதறுண்டு போனபோது, இக்குடும்பத்தின் தலைவரானவர் கூறியது யாதெனின், "இன்று பலவீனத்தால் பிரிந்த நாம் எதிர்காலத்தில் யாராலும் வெல்லவே முடியாத வலுமிக்க சாம்ராஜ்யத்தை இவ்வுலகில் கட்டமைக்க வேண்டும், நம்மை தவிர பிறர் அனைவரையும் மாற்று சமூகம் என்றே கருதியும், அவர்களை ஆட்டி படைக்கும் வல்லமையையும் நாம் பெற வேண்டும், உலகை ஆள்வதே நமது லட்சியம், அதற்காக எதையும் செய்ய துணிய வேண்டும்..!" என உரைத்தார். கண்களின் வழியே லட்சியத்தின் வெறியை காட்டினார், கேட்ட வாரிசுகளும் நியூட்டனின் 3 ம் விசையை அவருக்கு எதிரே வெளிப்படுத்தினர்.!
அன்று சூளுரைத்து தனது குடும்பத்தை பிரித்த அவர், என்று நாம் அனைவரும் ஒன்று சேருவோமோ அப்போது உலகம் நமது காலுக்கடியில் கிடக்க வேண்டும் என்றார், வாரிசுகளும் ஆமோதித்தார்கள்.!
#அநுனாக்கிகளும்_மனிதர்களும்..
நிபிரு கிரக வாசிகளான அநுனாக்கிகள், பூமியில் மனிதனின் மரபணுவை மாற்றி அறிவில் சிறந்த விலங்கான மனிதனாக்கப்பட்ட விலங்குகள் தங்களை உருவாக்கிய அநுனாக்கிகளையே எதிர்த்து ஆங்காங்கே கலவரங்கள் நிகழ்த்தினர். இதனால் கோபமடைந்த அநுனாக்கிகள் இந்த விலங்குகளை கட்டுப்படுத்த இவைகளைவிட அறிவில் பெரிய விலங்குகளை படைப்பதன் அவசியத்தை உணர்ந்தது. அப்படி தேர்வு செய்யப்பட்ட மனித விலங்குகளில் சில விஸ்வாசமான மனித விலங்குகளின் மரபணுக்கள் மேலும் மாற்றப்பட்டன.! அதவாது, #அப்டேட்டட் மனித விலங்குகள்.!
தொடரும் .......
No comments:
Post a Comment