Friday, 12 October 2018

குறி சொல்லும் கர்ண எட்சிணி

குறி சொல்லும் கர்ண எட்சிணி
யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.
கர்ண எட்சிணி மந்திரம்
'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"
- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:
நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
1,
குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:
சிறியா நங்கை,பெரியா நங்கை,அழுகண்ணி,ஆனை வணங்கி,இந்த மூலிகைகளுக்கு முறையாக சாபநிவர்த்தி செய்து காப்புகட்டி பிடுங்கி வந்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் சந்தனம்,ஆந்தை பித்து,வெள்ளைக்கவுலி பித்தும் சேர்த்து அரைத்து,மையை வழித்து எடுத்து,கர்ண எட்சிணியை தியானம் செய்து மந்திர உருவேற்றி மையை நெற்றியில் இட்டுக் கொள்ள நடந்த,நடக்கின்ற,நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி தெளிவாக குறி சொல்லாம்.
கர்ண எட்சிணி மந்திரம்:
"அரிஓம் அங் மங் வங் கர்ண எட்சிணி வா வா வந்து குறி சொல்லம்மா வந்து என் முன் நிற்க சுவாகா"
இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டு தான் குறி பாட முடியும்.
எந்தவிதமான ஜாதகக்குறிப்புகளும், வேறு எந்த வகை உபகரணங்களும் இல்லாமல் சில ஜோதிடர்கள் நாம் போய் எதிரே அமர்ந்தவுடனே, நமது பிரச்சனை என்ன? எதற்காக அவர்களை நாடி வந்திருக்கிறோம் அது தீருமா? தீராதா? என்று கூறத்துவங்கி விடுகிறார்கள். இது அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டால் யட்சனிகளை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது அவர்கள் கேட்கும் தகவலை காதுகளில் சொல்கிறது என்றும் பலர் சொல்கிறார்கள். அது எப்படி சொல்கிறது என்று பின்னர் விளக்குங்கள். இப்போது யட்சனி என்றால் என்ன?
மலையாளத்தில் பேய்களை, யட்ச சக்திகள் என்ற பொருள்பட யட்சி, யட்சன் என்று அழைப்பார்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிசாசுகளை அப்படி அழைப்பது தான் வழக்கம். ஆனால் யட்சனிகளுக்கும், பேய்களுக்கும் சம்பந்தமே கிடையாது. கடவுளின் படைப்பில் மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் என்று பல்வேறுபட்ட இனவகைகள் இருப்பது போல, யட்சனி என்பதும் ஒருவகை உயிரினம். சில உயிர்கள் கண்களுக்கு தெரியும். சில உயிர்கள் தெரியாது. கண்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்பதனால் அவைகள் இல்லையென்றாகிவிடாது.
தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் என்ற வார்த்தைகளை பல முறை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். அவர்களும் மனிதர்களை போன்ற ஒரு இனமே. மனிதர்களை கண்களால் பார்க்கலாம், இவர்களை பார்க்க முடியாது. சாஸ்திரங்கள் இவர்களுக்கு சூட்சம தேகிகள் என்ற பெயரை கொடுக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரியாத உடம்பு படைத்தவர்கள் என்பது இதன் பொருளாகும். யட்சனிகள் என்பதும் இந்த வகையை சேர்ந்ததே ஆகும். நாம் வாழுகிற இந்த உலகிற்குள்ளேயே நமது கண்ணுக்கு புலப்படாத இன்னொரு மாய உலகம் இருக்கிறது. அந்த மாய உலகில் வாழ்பவர்களே யட்சினிகள்.
நம்புவது மிகவும் கடினம் தான். காரணம் மனிதர்களாகிய நாம், நமது அறிவு எத்தனை தூரம் செல்கிறதோ அத்தனை தூரத்தில் உள்ளவைகளையே உண்மை என்று நம்புகிறோம். அதற்கு அப்பால் உள்ளது நமக்கு தெரியாது என்பதனால், அதை பற்றிய அறிவு நமக்கு கிடையாது என்பதனாலும், அதை இல்லை என்றே மறுத்துவிடுகிறோம். ஆனால் சில காரிய காரணங்களை ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உலகம் என்பது இருக்கலாம் என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும்.
நமது கண்களால் பார்க்க கூடிய வெளிச்சம் ஒரு எல்லைக்கு உட்பட்டதே அந்த எல்லையை மீறிய அதீத வெளிச்சத்தையோ அல்லது மிக குறைவான வெளிச்சத்தையோ நம்மால் பார்க்க முடியாது. ஒலி அலைகளையையும், ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தால் தான் நமது காதுகளால் கேட்க முடியும். மிகவும் சத்தமான் ஒலி, சன்னமான ஒலி இவைகளை கேட்க முடியாது. அதற்காக இந்த ஒளியும் - ஒலியும் இல்லை என்று ஆகிவிடுமா? யட்சனிகள், கந்தர்வர்கள் போன்ற மாய சக்திகள் மிக அதீதமான வெளிச்சத்தை போன்றவர்கள். அதனால் தான் நமது சாதாரண கண்களால் அவர்களை பார்க்க முடியவில்லை.
வானத்தில் அனைத்து இடத்திலும் தொலைக்காட்சியின் அலைவரிசைகள் பரவி கிடக்கிறது நாம் அதற்கான சரியான் சமிக்ஞையை (signal) நம் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில் கொண்டு வரும் போது படங்களை காண முடிகிறது. அதே போல நமது மூளையையும், மாயா உலக அலைவரிசைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தால் அந்த உலகத்தின் இயக்கத்தை மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நமது அறிவுஜீவித்தனம் அவைகளை நம்ப மறுக்கிறது.
யட்சனிகள் ஒருவகை இனம் என்று கூறுகிறீர்கள். ஆனால் யட்சனிகளை பற்றி அறிந்தவர்கள் அவைகள் அறுபத்து நான்கு என்று சொல்கிறார்கள். அவைகள் ஒரு இனம் என்றால் கடவுளால் படைக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையே இவ்வளவு தானா? அவர்களில் ஜனன மரணம் என்பது கிடையாதா?
ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் வானத்தில் வெறும் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மட்டும் தானா இருக்கிறது? எண்ணிக்கையில் அடங்காத கோடான கோடி நட்சத்திரங்கள் அல்லவா இருக்கின்றன. இருபத்தி ஏழு என்பது தனிப்பட்ட நட்சத்திரத்தின் எண்ணிக்கை அல்ல. அது ஒரு மண்டலம் அல்லது பிரிவு. பரந்து விரிந்த வான்வெளியில் இருபத்தி ஏழு மண்டலங்களாக நட்சத்திர பிரிவுகள் இருக்கின்றன என்பது இதன் பொருளாகும். அதே போன்று தான் அறுபத்தி நான்கு யட்சனிகளின் வகையாகும்.
கர்ண யட்சனி, கர்ண பிசாசினி என்று தொடங்கி சாமூண்டா, ஹம்சா, சோபனா, வாஷாசித்தி, ஜிக்வாலா மகா குபேரி, சர்வ காரியா, அசுப காரியா, தனதா, ரத்த கம்பளா, ராஜ்யபிரதா, சர்வவித்யா, ஜெயா, போகா, பத்மாவதி, பிரதா, மதனா, விஷாலா,விப்ரமா, வடாக்னி, பண்டாரா, பத்மினி, விசித்திரா,காலகர்ணிகா, சந்திரவாடா, ஜெயா அர்க்க, ஷீரார்ணவா, ராஜ்யதா, அபமார்க், சந்த்ராமுர்த, உத்திஷ்ட, மகாமாயா, வரிசாதனா, இத்யாகா, மாதங்கி, கடலேகுமாரி, சாதனவித்யா, பூதலோஷனாம் ஜலபாணி, சர்வாங்க சுலோட்சனா, ராஜ்யதா, அங்கோலா, தாத்ரிகுண்டி, தாத்ரி உதும்பர, கரிதாத்ரி, பில்வ, தனதாயி, புத்ரதா, ரதிபிரியா, சிஞ்சி, ஜலவாஷ்ணி, கணவதி, சந்திரிகா, அனுராகினி, சொர்ணரேகா, மகாநந்தா, சூரசுந்தரி, அணிலா, சண்டவேகா, மஹாபயா, குஷ, மந்தாகினி என்று அறுபத்தி நான்கு யட்சனி வகைகளை கூறுகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் பல்லாயிரம் யட்சனிகள் உண்டு
நன்றி குருமுனி

No comments:

Post a Comment