என் தமிழ் மருத்துவத்தை காப்பது என் கடமை அதுவே என் தமிழ் சித்தர்களுக்கு நான் செய்யும் தொண்டு.!
1: முத்துக் கொட்டை முதலிய நுட்பத்தினுசுகளை யிடுத்துச் சலத்திற் கரைத்துக் கொதிக்க வைப்பதில் இருந்து பிறப்பது #கொதித்தைலம்.
2: வெண்ணெய் கோழி முட்டைக் கரு முதலிய வஸ்த்துக்களை உருக்குவதனாற் பிறப்பது #உருக்குத்தைலம்.
3: பானையின் அடியில் துவாரமிட்டு அந்த கடத்திற்குள் சிவனார் வேம்பு முதலிய திரவியங்களை நிறைத்து வாய்க்கு சீலைமண் செய்து கீழ்ப்புறத்தில் கலசம்வைத்துப் புடம் போடுவதனாற் பிறப்பது #புடத்தைலம்.
4: சந்தனக்கட்டை முதலிய மணமுள்ள சரக்குகளைத் தூளாக்கிப் பானையிற்போட்டு சலம்விட்டுப் பட்டி கட்டியிறக்குகின்ற தீநீரினால் பிறப்பது #தீநீர்த்தைலம்
5: எள்ளுடன் சில சரக்குகளைச் சேர்த்தரைத்த கற்கமருந்தைச் சூரியபுடமாக வைக்கும் போது வெய்யிலின் வெப்பத்தினால் பிறப்பது #ஆதவத்தைலம்.
6: ஓதமில்லாத பூமிக்குள்ளிருந்து கொப்பளித்துத் தானே வருவது #மண்_தைலம்.
7: மரத்தில் வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து பிறப்பது #விருக்கத்தைலம்.
8: உயர்ந்த மலைகளிலிருந்து வழிவது #சிலைத்_தைலம்.
9: புனுகுச் சட்டம் முதலியதுகளை நறுக்கிச் சலத்திலூற வைப்பதனாற் பிறப்பது #நீர்த்தைலம்.
10: மட்டிப்பால், சாம்பிராணி முதலிய சரக்குகளை நெருப்பில் காய்ந்த கலசத்திற் போட்டு அதன் மேல் சலநிரப்பிய தாம்பாளத்தை வைக்க அந்தப் புகையால் பிறப்பது #ஆவித்தைலம்.
11: பாதரச முதலிய சரக்குகளை அரைத்துச் சீலையிற்றடவிக் காயவைத்ததை யிருப்புக்கதிரில் பந்தம்போற் சுருட்டிக் கட்டித் தைலங்களில் தோய்த்துக் கொளுத்தும் போது அதில் இருந்து சுடரோடே பிறப்பது #சுடர்த்_தைலம்.
12: எள்ளாதி வித்துக்களில் இருந்து செக்கு முதலிய எந்தரங்களி னாற் பிறப்பது #எந்திரத்_தைலம் என்று பலவகை தைலங்களும் உண்டு.
13: அழிஞ்சில் போன்ற வித்துக்களை ஒரு கடத்தில் நிறப்பி மண்ணில் குழி அமைத்துப் பிறப்பது #குழித்தைலம்.
14: பானையில் மஞ்சள் மெழுகு மணல் போன்ற வஸ்துக்களை நிறப்பிப் கம்பி செறுகிப் பிறப்பது #மைனத்_தைலம்.
________________________________________
________________________________________
இப்படிப் பிறக்கும் தைலாதிகள் ஐவகைப் படும்.
1: சிரசிற் கிடுகின்றது #முடித்தைலம்.
2: உள்ளுக்குக் குடிக்கின்றது #குடித்தைலம்
3: சருமத்தின்மீது தடவிப் பிடிக்கின்றது #பிடித்தைலம்.
4: நவத்துவாரங்களின் வழியாகச் செலுத்துகின்றது #துளை_சிகிச்சைத்தைலம்.
5: புரகைளின் வழியாக ரத்தம் முதலியவைகளை ஒழுகப்பண்ணுகின்ற துஷ்ட விரணங்களுக்கு உதவுகின்றது #சிலைத்தைலம்.
என ஐவகைக்குள் அடங்கும்.
நடுப்பழனி பிரம்மஞான வித்யாபீடம் செங்குணம் 9444033381
No comments:
Post a Comment