Tuesday 2 October 2018

சுபமுகூர்த்தம் என்றால் சும்மாவா?

#சுபமுகூர்த்தம் என்றால் சும்மாவா?
பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு வருடமும், இன்ன வருடத்திய சுபமுகூர்த்தங்கள் என்று, சித்திரை முதல் பங்குனி வரையிலான நல்ல நாட்களைப் பட்டியலிடுவதுடன், அடுத்த ஆண்டு, முதல் மூன்று மாதங்களுக்கான, சுப முகூர்த்தங்களையும் பட்டியலிடுகின்றன.
இதன் நோக்கம், திருமண மண்டபங்களை சுமார் 6, 7 மாதங்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டியுள்ள கட்டாயம் தான். இதில் தவறேதும் இல்லை. எனினும் இந்த முகூர்த்தங்களைச் சரியாகப் பார்த்துக் குறிப்பதில்லை என்பதை, மேலெழுந்த வாரியாகப் பார்த்தாலே புரியும்.
ஒரு முகூர்த்தம் என்பது 3 நாழிகை 45 வினாடி அல்லது 1 மணி 30 நிமிடம் கொண்ட கால இடைவெளியாகும். இந்த நேரம் முழுவதும் ஒரே லக்னத்தில் அடங்கியிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. முகூர்த்தத்தின் ஆரம்பம் ஒரு லக்னமாகவும், முடிவு வேறொரு லக்னமாகவும் இருக்கலாகாது.
முகூர்த்தத்தில், #முதலிடம் #லக்னத்திற்கே #தரப்படுகிறதுஎன்பதை மறக்கக்கூடாது. முகூர்த்த ஆரம்பத்தில் சொல்லப்படுகின்ற மந்திரத்தைக் கவனித்தாலே, லக்னத்திற்குத் தரப்படும் முக்கியத்துவம் புரிந்துவிடும்;
எனவே, லக்ன நிர்ணயத்தில் மட்டும் ஒரு சிறு பிழையும் செய்துவிடக் கூடாது என்பது நன்கு புலனாகிறது.
முகூர்த்தம் குறிக்கும் போது, அதில் நிகழக்- கூடிய #21 #தோஷங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். அவற்றின் விபரங்கள் வருமாறு:
#பூகம்பம் உண்டான மாதம்; #நட்சத்ரம் #உதிரும்_மாதம் (எரி நட்சத்திரம் தோன்றியது முதல் 1 வார காலம்), #கிரகண_தோஷம் (கிரகண நாள், மற்றும் அதற்கு முன் மூன்று, பின் மூன்று நாள்), #மல_மாதம்/அதிக மாதம் (intercalated month), #குளிகன்_தொட்ட #லக்னம் (அதாவது, முகூர்த்த லக்னத்தில் குளிகன் இருக்கக் கூடாது.), #பாவக்கிரகங்கள்_பார்வை பெறும் லக்னம், பாவிகள் #இருக்கும் லக்னம், #மற்றும்_விட்ட #லக்னம்; #6, 8, 12-மிடங்களில் #சந்திரன் #இருக்கும்_லக்னம்#குரு_சுக்ர_சமதிருஷ்டி_பெறும்_லக்னம்#குரு_சுக்ரர்_மகாஸ்தமன_நாள்_மற்றும்_முன்_ஏழு_பின்_ஏழு_நாட்கள் (அவர்களின் வக்ர அஸ்தமன நாள், மற்றும் அதற்கு முன் மூன்று, பின் மூன்று நாட்கள்); #ஸாயாஹ்ன_காலம்#ஸந்த்யா_காலம்#கண்டாந்தம் (ரேவதி 4, அசுவதி 1; ஆயில்யம் 4, மகம் 1; கேட்டை 4, மூலம் 1 ன் சந்திப்பு); #உஷ்ண_சிகை#விஷ_கடிகை#ஸ்திர_கரணங்கள்; #ரிக்த_திதிகள் எனப்படும் சதுர்த்தி, நவமி, சதுர்தசி ஆகியவை; #அஷ்டமி; #விஷ்டி_தோஷம்; #தியாஜ்யம்_தொட்ட #லக்னம்; #லாடம்; #ஏகார்களம்; #வைதிருதி; #அஹிசிரஸ்/ஸார்ப்ப_மஸ்தகம்; #ஆகுலம் முதலாகச் சொல்லப்படும் தோஷங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. தவிர, ராகு காலம்; யமகண்டம்; அசுபர் ஹோரைகள்; #காரி/கரி_நாட்கள்; #தனிய_நாட்கள்; #அசுபர்_ வாரங்கள்; #யோகப்பிழை (அமிர்த/ சித்தம் அல்லாத பிற யோகங்கள்) இத்யாதியும் தவிர்க்கப்பட வேண்டியவையே.
இத்தனையும் நீக்கிய நல்ல நாள் கிடைப்பது அரிது என்பது அறியாததல்ல. ஒரே நாளில், நன்மை தீமை இரண்டின் கூறுகளும் கலந்தே இருக்கும் என்பதும் ஊகிக்கக் கூடியதே. குற்றம் ஏதும் இல்லாத, முழுதும் குணங்களே நிறைந்த, நல்ல நாள் என்பது #தேவர்களுக்கும்_கிடைத்தற்கரியது என சாஸ்திரமே கூறுகிறது.
#தேவர்களுக்கும் என்பதில் எந்த #தேவ_ரகசியமும் இல்லை. விஷயம் இது தான். நமது #ஓராண்டு என்பது தேவர்களுக்கு #ஒரு_நாள் என்ற கணக்கீட்டின்படி, தேவர்களின் பரமாயுள் (தேவ_மானம்) என்பது, நமது ஆண்டுக்கணக்கில், #43830 ஆண்டுகளாகும். #இந்த_43830_ஆண்டுகள்_காத்திருந்தாலும் #கூட_ஒரு_குற்றமற்ற_முகூர்த்தம்_அமையாது எனின் எப்படி ஒரு நல்ல முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுப்பது?
கூடியவரை, குற்றங்கள் குறைந்தும், குணங்கள் கூடுதலாகவும் உள்ள நாளாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதோடு, லக்ன நிர்ணயத்தில் எந்தத் தவறும் செய்து விடாமல் இருப்பதே. எந்த சுப காரியங்களுக்கு எந்த #இடம்_சுத்தமாயிருக்க வேண்டும் - காட்டாகத், திருமண முகூர்த்தத்திற்கு 7-ஆமிடம் சுத்தம் - என்பதில்#சமரசத்திற்கு_யாதொரு_இடமும்_இல்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
ELECTIONAL ASTROLOGY எனப்படும் முகூர்த்த நிர்ணயம் #விதான_சாஸ்திரம் எனப்படும். இது தொடர்பாக, #கால_விதானம், #கால_ப்ரகாஸிகா, முஹூர்த்த_பதவி, #முஹூர்த்த_மாதவீயம், #சோதிட_கிரக_சிந்தாமணி_என்னும்_பெரிய_வருஷாதி_நூல்* போன்ற நூல்களின் மூலங்களையோ, மொழிபெயர்ப்பையோ படித்துத் தேர்வது மிகவும் அவசியம். பஞ்சாங்கத்தின் பின்னுள்ள குறிப்புகளை மட்டும் படித்துவிட்டு முகூர்த்தம் குறிக்கத் தலைப்படுவது அறவே சரியல்ல.
(* 1866ல் #தில்லையம்பூர்_சந்திரசேகர #கவிராஜ_பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்ட அற்புதமான தமிழ் நூல்)
முகூர்த்த நாளின் ஆங்கிலத் தேதிகளின் கூட்டு எண், #2, 5, 8 போன்ற விரும்பத்தகாத எண்களாக இருக்கக் கூடாது. திருமண நாளில் வரும் நட்சத்திரம், மணப்பெண் அல்லது மணமகனுக்கு #ஜன்ம, #அனுஜன்ம, #த்ரிஜன்ம நட்சத்திரங்களாக இருக்கக்கூடாது. இருவரது 3, 5, 7-வது நட்சத்திரங்களும், இருவரது சந்திராஷ்டம நட்சத்திரங்களும் கூடக் கட்டாயம் தவிர்க்கத் தக்கவை. முகூர்த்த லக்னத்திற்கு, குருவின் பார்வை இருப்பது மிகுந்த நன்மை செய்யும்.
என்னதான் அவசர உலகமாக இருந்தாலும், சில அடிப்படைக் கோட்பாடுகளிலாவது மிகுந்த கவனம் செலுத்தினால், மேற்கொள்ளும் செயல்களில் முழுவெற்றி பெறலாம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
#ஞாலம்_கருதினும்_கைகூடும்_காலம்
#கருதி_இடத்தாற்_செயின். (திருக்குறள் நன்றிகள் பேராசிரியர் விஷ்வநாத் தாஸ்).

No comments:

Post a Comment