Thursday, 4 October 2018

விடாத சுரத்திற்கு விஷ்ணு கிரந்தி

விடாத சுரத்திற்கு விஷ்ணு கிரந்தி
விஷ்ணு கிரந்தி 
இம்பூரல் வேர் 
துளசி 
பற்படாகம்
ஆடாதோடை
தூதுவேளை
சீந்தில் தண்டு
நிலவேம்பு
ஓமவல்லி
பேய்ப் புடல்
இவற்றில் அனைத்தும்
கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை சேகரித்து
அத்துடன் சுக்கு மிளகு மல்லி சேர்த்து
தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது கரும்பு வெல்லம் சேர்த்து கசாயமாக வைத்து
காலை மதியம் இரவு என்று மூன்று முறை குடித்து வர நாட்டில் உள்ள அனைத்து சுரங்களும் தீரும்.
காய்ச்சல் இல்லாதவர்கள் விஷ்ணு கிரந்தி
மூலிகை யுடன் சுக்கு மிளகு மல்லி சேர்த்து
குடித்து வர காய்ச்சல் சளி இருமல் வராது
சித்தர்கள் நூலில் நீலப்பூ விஷ்ணு கிரந்தி
மூலிகையை பொடி செய்து ஒரு மண்டலம்
சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு
நீங்கும் என்றும்
வெள்ளை நிற பூ விஷ்ணு கிரந்தியை
ஒரு மண்டலம் உண்டு வர நரை திரை நீங்கி
அவனுக்கு மரணம் இல்லை என்றும்
கற்ப நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால்
வெள்ளை விஷ்ணு கிரந்தி கிடைப்பது
சிரமம்.

Image may contain: plant, flower, outdoor and nature

No comments:

Post a Comment