Tuesday, 2 October 2018

செல்வ வசியம்,பணவசியம் தரும் ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்...

செல்வ வசியம்,பணவசியம் தரும் ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்...
செல்வ வசியம்,பணவசியம் தரும் ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்
செல்வ வளத்தினை பெருக்கும் வழிமுறைகள்: பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளானவை உணவு, உடை, இருப்பிடம்.ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது.
வளமான வாழ்வுக்குத் தேவையானவை ஆரோக்கியம், கல்வி, செல்வம் ஆகியவை.அவற்றுள் செல்வம் மற்ற இரண்டையும் பெற்றுத் தரக் கூடியது. மேலும் வாழ்வில் செல்வத்தைப் பெற்றால்,அதன் மூலம் எதையும் பெறலாம் என்ற நிலையுள்ளது.எல்லாச் சக்திகளையும் போல ஆதியில் செல்வம் இறைவனுடைய சக்தியாக விளங்கியது.
அருள் பெருகினால் அனைத்தும் பெருகும்,அவற்றுள் பொருளும் ஒன்று. இறைவனை இடையறாத நினைவு, ஆத்ம சமர்ப்பணம், தியானம், நம்பிக்கை,பக்தி, நேர்மை, உண்மை, சேவை, காணிக்கை, ஞானம், சுத்தம், மௌனம், ஒழுங்கு போன்ற எல்லா உயர்ந்த ஆன்மிக முறைகளும் நமக்கு செல்வத்தை தருகின்றவையாக அமைகின்றது.
பொதுவாகச் செல்வமுள்ள இடத்தில் சுத்தம் இருப்பதைக் காணலாம்.சுத்தம் செல்வத்தைக் கொண்டுவரும் என்பது ஆன்மிக உண்மை. பொருள்களுக்கு ஜீவன் உண்டு. அவற்றை நாம் கவனிப்பதை அவை விரும்புகின்றன.சுத்தமாக இருப்பதை அவை போற்றுகின்றன.அழகாக அடுக்கி வைத்தால் அவை பெருமைப்படுகின்றன.
பேசினால் சக்தி செலவாகும் என்பதால் அதிகப் பேச்சு பொருள் வரவைக் குறைக்கும்.பேசாமலிருந்தால் சக்தி சேகரமாகும். அதனால் பொருள் வரவு அதிகமாகும்.பேச்சில் இரு அம்சங்களுண்டு. சத்தம், அளவு. அதிக சத்தம் விரயம். அதிக நேரம் பேசுவது விரயம். அளவோடு குறைந்த தொனியில் பேசுவது பொருள் சேர்வதற்குரிய முறையாகும்.
புற ஒழுங்கு என்பது,அக ஒழுங்கைப் பிரதிபலிப்பதால்,ஒரு முயற்சியால் மட்டும் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது.மனம் கட்டுப்பட்டாலன்றி ஒழுங்கு கட்டுப்படாது.அதே காரணத்தால் பொருள் ஈட்டும் விஷயத்தில் ஒழுங்கிற்குப் பலன் அதிகம்.
வீட்டில் செல்வத்தினை பெருக்கும் வழிகள்:
1.வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.
2.குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
3.கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.
4.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
5.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது,அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
6.தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து, வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்,வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.
7.நெருப்பும்,தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு.
8.வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.
9.வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
10.பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.
11.செல்வம் அருளும் ஐஸ்வர்யலட்சுமி மந்திரம் தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமிஅருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா!
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ!

No comments:

Post a Comment