Thursday, 4 October 2018

கர்ப்பப்பை நீர்கட்டிகள் மாதவிடாய் கோளாறுகள் நீங்க

கர்ப்பப்பை நீர்கட்டிகள் மாதவிடாய் கோளாறுகள்
மாதவிடாய் பிரச்சினை உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி,
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர். சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது. பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
அசோகப்பட்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு, பறங்கிப்பட்டை, வசம்பு, நாகேஸ்வரம், துளசி, தசமூலம், தேவதாரூ, சடாமாஞ்சில், மாம்பருப்பு போன்ற மூலிகைகள் கலந்தது.
ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும்
இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்..........காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்
உடல் பலகீனம், கருமுட்டை வளர்ச்சியின்மை, மாதவிடாய் கோளாறு நீங்க
வெண்காரம் 20 கிராம்
சுக்கு 20 கிராம்
மிளகு 20 கிராம்
திப்பிலி 20 கிராம்
வசம்பு 20 கிராம்
கோஷ்டம் 20 கிராம்
ஏலம் 20 கிராம்
கிராம்பு 20 கிராம்
வசம்பு - 20 -கிராம்
கரி மஞ்சள் -20 -கிராம்
அதிமதுரம் -20 -கிராம்
கோஷ்டம் - 20-கிராம்
இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்
சோற்று கற்றாழை எடுத்து மேல் தோல் சீவி சோற்று கற்றாழை எடுத்து ஏழுமுறை கழுவி சாக்லெட் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் கற்றாழை சோறு 25கிராம் கலந்து கல்வத்தில் போட்டு அரைக்கவும் 12 மணி நேரம் அரைக்க வேண்டும்
காலை இரவு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட வேண்டும்
பெண்களின் பல பிரச்சனைகளை தீர்க்கும்
இக்கற்ப மருந்தை சாப்பிடுவதால் பலன்
பெண்களுக்கு
கர்ப்பப்பை பலவீனம்
கர்ப்பப்பை நீர்க்கட்டி
அதிக நாட்கள் வெள்ளைப் படுதல்
மாதவிலக்கு நேரத்தில் அதிக வயிற்றுவலி
உடல் அதிக உஷ்ணம்
முடி கொட்டுதல்
உடல் வேனக் கட்டி போன்ற பல உஷ்ணத்தால் வரும் அனைத்து நோய்கள் நீங்கி கர்ப்பம் தரிக்கும்.

No comments:

Post a Comment