Thursday 4 October 2018

நாகதாளிக்கற்றாழை


நாகதாளிக்கற்றாழை
சாற்றில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ நாகதாளிக்கற்றாழை அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சாற்றில் அதிக அளவில் உள்ளன.
உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பாதிப்புகளை சரிசெய்து புனரமைப்பதற்கு, கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள் துணை புரிகின்றன. வெளிப்புற காரணிகளுக்கு ஏற்றவாறு, உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை சோத்துக் கற்றாழை சாறு அளிக்கிறது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை உடலுக்கு அளித்து, அவற்றை உடலில் தேக்கி வைக்க நாகதாளிக்கற்றாழை சாறு பயன்படுகிறது
நாகதாளிக்கற்றாழை சாறு, தோலில் உள்ள செல்களின் பாதிப்புகளை சரிசெய்து தோலை பளபளப்பாகவும், அழகாகவும் மாற்றுகிறது. கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள், தோலின் பாதிப்புகளை சரி செய்வதோடு புனரமைக்கவும் பயன்படுகிறது. தோலில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், தோல் அலர்ஜி போன்றவற்றிற்கு நா தாளிக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது
நாகதாளிக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்

No comments:

Post a Comment