Wednesday, 3 October 2018

மாந்திரீகக் கலை கை வரும் விதம்

மாந்திரீகக் கலை கை வரும் விதம்
மாந்நிரீகக் கலையும் மற்ற வேறு எந்தக் கலைகளும் சரி, எல்லோருக்கும் வந்து விடாது.அதற்குரிய அமைப்புள்ளவர்களே இக்கலையில் பயிற்சி பெறமுடியும். இக்கலையில் வல்லுனர் ஆக முடியும். இப்படிக் கூறுகிறது சோதிடக் கலை. இன்ன லக்கனம் ,இன்ன ராசி, இன்ன நட்சத்திரம் உள்ளவர்களுக்கே மாந்திரீகக் கலை வரும் என விளக்கமாகக் கூறுகிறார், சோதிடக் கலை வல்லுனரான நந்தீஸ்வரர்.
எவர் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இதனால் புகழ்பெற்று மாந்திரீகக் கலையில் சிறப்புற்று விளங்க வேண்டுமானால் அவரவர் ஜாதகத்தில் குறிப்பிட்ட அமைப்பு இருக்க வேண்டியது மிக அவசியம் என்கிறார் நந்தீஸ்வரர்.
எட்டுச் சுவடிகளில் பாடல்களாக் கூறப்பட்டிருப்பதையே இங்கு விரிவாகக் கூறப்படுகிறது.
பனிரெண்டு ராசிகளில் மேஷ ராசி,கடக ராசி,சிம்ம ராசி, கன்னி ராசி, துலா ராசி ஆகிய ஐந்து ராசிகளுக்குள் அடங்கும் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இம்மந்திரக் கலை சித்தியாகும்.
மேலும் நீங்கள் பிறந்த லக்னத்தில் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களைப் பெற்றிருந்தாலும் இம் மாந்திரீகக் கலையில் தேர்ச்சி பெறலாம்.
லக்கனாதிபதி,நாலாமிடத்து அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகிய மூவரும் ஆறாவது இடத்தில் அமைந்தாலும் இக்கலையில் தேர்ச்சி பெறலாம்.
நாலாமிடத்திற்கு அதிபதியான கிரகம் ஒன்பதாமிடத்திலிருந்து அக்கிரகம் சுபக் கிரகங்களின் பார்வை பெற்றாலும், நான்காமிடத்து அதிபதி ஒன்பதாமிடத்தில் தேர்ச்சி பெறலாம்.
லக்னத்துக்குடையவனும்,ஏழாமிடத்துக்கு அதிபதியானவனும் ஒரே ராசியில் சேர்ந்திருந்தாலும் இக்கலையில் தேர்ச்சி பெறலாம்.
லக்கினாதிபதியும் ஏழாமிடத்து அதிபதியும், பகை வீட்டில் அமர்ந்து அந்த வீட்டை செவ்வாய் கிரகம் பார்த்தால் அப்படிப் பட்ட ஜாதகர் மாந்திரீகக் கலையில் மகத்யான தேர்சாசி பெறுவர்.
ஒன்பதமிடத்து அதிபதி வலிமை பெற்றுசுபக் கிரக பார்வை பெற்றவராக இருந்தால் அப்படிப்பட்ட ஜாதகர் சிறந்த தெய்வீக சக்தியைப் பெறுவார்.
ஒன்பதிற்குரியவர் கேந்திர கோணங்கள் எனக் கூறப்படும் 1,4,7,10 ஆகிய வீடுகளில் அமைந்திருந்தாலும் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், சிறந்த குருவின் ஆசியால் மாந்திரீகக் கலையில் மகத்தான புகழ் பெறுவார்.
நாலமிடத்து அதிபதியும் ஒன்பதாமிடத்து அதிபதியும் இவர்களை சந்திரன் பார்க்கும் அமைப்பிருந்தால் இக்கலையில் தேர்ச்சி பெறுவான்.
நாலாமிடத்து அதிபதியும் லக்கனாதிபதியும் நல்ல ராசியில் அமைந்து, இவர்களுடன் சுக்கிரன் சேர்ந்தாலும், பார்த்தாலும் அப்படிப்பட்ட ஜாதகர் நஞ்சுகளை இறக்கும் மந்திர வித்தைகளில் தேர்ச்சி பெறுவார்.
பத்தாமிடத்து சூரியன் பத்தில் அமைர்ந்து, குருவும் அங்காரகனும் சுப இடத்தில் அமர்ந்து சுபப் பார்வை பார்த்தால் இக்கலையில் வல்லவராகலாம்.
பத்தாமிடத்து அதிபதி லக்கனத்துக்குடையவன் சூரியனோடு கூடியிருந்தாலும், இவர்களை ராகு பார்த்தாலும் அப்படிப்பட்ட ஜாதகர் மாந்திரீகக் கலையில் மகதான புகழ் பெறுவார்.ஏராளமாகச் சம்பாதிப்பார்.
பத்தாமிடத்தில் சூரியன் இருந்தாலும் இந்த கலையில் தேர்ச்சி பெறுவார். பத்தாமிடத்து அதிபதியும் ஐந்தாமிடத்து அதிபதியும் இவர்களோடு வலிமை மிக்கக் கிரகங்கள் கூடினாலும் இக்கலையில் தேர்ச்சியைப் பெறுவார்.
ஆறாமிடத்து அதிபதி பாவக் கிரகமாக இருந்து, அவரை சுபக்கிரகம் பார்த்தால் மாந்திரீகக் கலையில் மிக மோசமான வேலைகளைச் செய்வார்..
ஆறாமிடத்தில் ராகு அமைந்தால் விஷமிறக்கும் மாந்திரீகத்தில் சிறப்பான புகழ் பெறுவார்.
இதுவரை கூறப்பட்ட ஜாதக அமைப்பு இல்லாதவர்கள் போலித்தனமாக வேடமிட்டுப் பணம் சம்பாதிபுபார்கள். மாந்திரீகக் கலையையும் சோதிடக் கலையையும் பயன்படுத்திப் பிறருக்குக் கேடு செய்பவர்கள், அல்லது பிறரிடமிருந்து பணத்தை அபகரிப்பவர்கள் கொடிய பாவத்திற்காளாகிறார்கள். இவர்கள் ஈரேழு பிறவியிலும் இந்தப் பாவத்திற்குரிய தண்டனைகளை அனுபவிப்பார்கள் எனக் கூறுகிறது,ஜோதிட சிந்தாமணி எனும் நூல்.
எனவே முறைப்படிக் கற்று அறம் தவறாமல் இக்கலையைப் பயன்படுத்துங்கள். பலன் பெறுங்கள்.புகழ் பெறுங்கள் நலம் பெறுங்கள். நன்றி 

No comments:

Post a Comment